வஹாபிசத்தை பிரச்சாரம் செய்த 2 பேர் இன்று கைது - கட்டாரில் இருந்து நாடு கடத்தப்பட்டவர்களாம்
- தெரண -
சமூக ஊடகங்களில் வஹாபிசம் மற்றும் இஸ்லாமிய தீவிரவாதத்தை பிரச்சாரம் செய்த குற்றச்சாட்டில் காத்தான்குடி பிரதேசத்தில் வைத்து மேலும் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பயங்கரவாத விசாரணை பிரிவினரால் குறித்த சந்தேகநபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
28 மற்றும் 29 வயதுடைய காத்தான்குடி பிரதேசத்தை சேர்ந்த இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.
குறித்த இருவரும் கடந்த தினம் கட்டாரில் இருந்து நாடுகடத்தப்பட்ட 6 பேரில் மீதமிருந்த இருவராகும்.
ஏனைய நான்கு சந்தேகநபர்களும் இதற்கு முன்னர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
சந்தேகநபர்கள் இருவரும் கொழும்பு பயங்கரவாத விசாரணை பிரிவில் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் படி அவர்கள் தொடர்பில் தடுப்புக் காவல் உத்தரவொன்று பெற்றுக் கொள்ளப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
Post a Comment