Header Ads



2 வருடங்களாக 200 முஸ்லிம்கள் தடுத்துவைப்பு - முஸ்லிம் கவுன்சில், சட்டத்தரணிகள் சங்கத்திற்கு கடிதம்


சாலிய பீரிஸ், ஜனாதிபதி சட்டத்தரணி, தலைவர், இலங்கை சட்டத்தரணிகள்  சங்கம், 153, மிஹிந்து மாவத்தை,  கொழும்பு 12. 

அன்புள்ள திரு பீரிஸ்,

தீவிரமயமாக்கலை நீக்கல் பற்றிய மார்ச் 12 ஆம் திகதி  வர்த்தமானி அறிவிப்பு: 

முதலில், நீங்கள் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதையிட்டு எமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். அப்பொறுப்பை வெற்றிகரமாக நிறைவேற்ற எமது வாழ்த்துக்கள்!

 இலங்கை முஸ்லிம் அமைப்புகளின் கூட்டமைப்பான முஸ்லிம் கவுன்சில் ஒப் ஸ்ரீலங்கா (MCSL), 2021 ஏப்ரல் 4 அன்று, முஸ்லிம் அமைப்புகள், முக்கிய முஸ்லிம் புத்தி ஜீவிகள்  மற்றும் சிவில் ஆர்வலர்கள் கொண்ட ஒரு  கூட்டத்தை , மேற்கண்ட வர்த்தமானி அறிவிப்பு:  பற்றி கலந்தாலோசிப்பதற்காகக் கூட்டியது. அங்கு இந்த வர்த்தமானியை எதிர்த்து நீதிமன்றத்தில் முறையிட ஏக மனதாக முடிவு செய்யப்பட்டது. மற்றும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்துடன் கலந்துரையாடி, சட்ட வல்லுநர்கள் மற்றும் சிவில் சமூகம் இவர்களுடன் சேர்ந்து இந்த கடுமையான வர்த்தமானியை எதிர்க்கவும்  தீர்மானம் எடுக்கப்பட்டது  

21/4/2019 முதல் எந்த வித குற்றச்சாட்டுகளோ நீதித்துறை செயல்முறைகளோ இன்றி, சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள, இரு நூறுக்கும் மேற்பட்ட முஸ்லிம்களை விடுதலை செய்வதே இந்த வர்த்தமானி அறிவிப்பின்:  நோக்கம் என சிலர் வாதிடுகின்றனர்.   ஆயினும், சிறுபான்மையினர், சிவில் ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள்  மற்றும் விசேடமாக, அரசாங்கத்தின் கருத்துக்களுக்கு  எதிர்ப்பு தெரிவிக்கக் கூடிய எவரொருவரும், இச்சட்டத்தின் கீழ் எந்த நீதி வழி  முறையும் இன்றி சிறையில் அடைக்கப்படலாம் என அஞ்சப்படுகிறது

இந்த வர்த்தமானியின் மூலம், எவரொருவரும் தன்னிச்சையாக கைது செய்யப்பட்டு, நீதித்துறை மேற்பார்வை இன்றி தடுப்புக்காவலில் வைக்கப்படுவதற்கும், மற்றும் அது பற்றி எந்த விதத்திலும் நியாயம் கோரவோ, விசாரிக்கவோ, மறுப்பு தெரிவிக்கவோ அல்லது நீதிக்காக  வாதாடவோ இந்த சட்டத்தின் கீழ் எந்த வழிமுறையும் அளிக்கப்பட மாட்டாது என்பதனையும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின்  கவனத்துக்குக் கொண்டு வர விரும்புகிறோம்.

உங்கள் அன்பான பரிசீலிப்புக்கு நன்றி. 

விரைவில் நேர்மறையான பதிலை  எதிர்பார்க்கிறோம்.

ஹில்மி அஹமத்

………………………………………..

உப தலைவர்/ இலங்கை முஸ்லிம் கவுன்சில்

No comments

Powered by Blogger.