185 கொரோனா தொற்றாளர்கள் வீடுகளில் தங்கவைப்பு - நெருக்கடியில் கம்பஹா, சிகிச்சைக்கு அனுமதிப்பதற்கு இடவசதி இல்லை
கம்பஹா மாவட்டத்தின் 15 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் இனங்காணப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் 185 பேர், கடந்த ஐந்து நாள்களாக அவர்களது வீடுகளிலேயே தங்க வைக்கப்பட்டுள்ளதாகப் சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.
கொரோனா சிகிச்சை மத்திய நிலையங்களில் தொற்றாளர்கள் நிரம்பி வழிவதால், புதிய தொற்றாளர்களை சிகிச்சைகளுக்காக அனுமதிப்பதற்கு இடவசதிகள் இல்லை எனவும், ஆனால் தொற்றாளர்கள் வீடுகளில் தங்க வைக்கப்பட்டிருப்பது கடுமையான நிலைமை எனவும் சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும், தொற்றாளர்களை அவர்களது வீடுகளிலேயே தங்க வைக்கப்பட்டிருப்பதால் வீட்டிலுள்ள ஏனையோருக்கும் கொரோனா வைரஸ் பரவும் ஆபத்துக் காணப்படுகிறது. எனினும் இதுத் தொடர்பில் பல தடவைகள் சுகாதாரத் தரப்பினருக்கு அறிவிக்கப்பட்டிருக்கின்றபோதிலும் உரிய நடவடிக்கைகள் இதுவரையில் எடுக்கப்படவில்லை எனவும் குற்றஞ்சுமத்தப்படுகிறது.
Post a Comment