லெபனானில் இன்னல்பட்ட 177 இலங்கையர்கள் நாடு திரும்பினர்
லெபனான் நாட்டிற்கு தொழிலுக்காகச் சென்று பல்வேறு இன்னல்களுக்குள்ளாகிய 177 இலங்கையர்கள், இலங்கை விமான சேவையின் விசேட விமானமொன்றில் இன்று -01- அதிகாலை 3:45 மணிக்கு நாட்டை வந்தடைந்துள்ளனர்.
வெளிநாடுகளுக்கு தொழிலுக்காக சென்று மீண்டும் இலங்கைக்கு வரமுடியாமல் தவித்த இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வரும் வேலைத்திட்டத்தின் கீழ் இவர்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர்.
இவர்களில் அதிகமானவர்கள் லெபனான் நாட்டிற்கு வீட்டுப் பணிப்பெண்களாக சென்றிருந்த பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அத்துடன், கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த இவர்களை தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக இலங்கை இராணுவத்தினரால் அரசாங்க தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment