Header Ads



17 வயது மகளை திருமணம் செய்துவைக்க, முயன்ற பெண்ணை கொலை செய்த தந்தை


கலேவல - பட்டிவல பிரதேசத்தில் தனது மகளை வயது கூடிய நபரொருவருக்கு திருமணம் செய்து வைக்க முயன்ற பெண்ணை,  கூரிய ஆயுதத்தால் தாக்கி கொன்ற தந்தையொருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு உயிரிழந்த பெண் 19 வயதானவர் என்பதுடன், 42 வயதான குறித்த சந்தேக நபரை கைது செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தாயை இழந்த 17 வயதான குறித்த சிறுமி சிறுவர் காப்பகமொன்றில் வளர்ந்து வந்துள்ளதுடன், புத்தாண்டு விடுமுறைக்காக வீட்டிற்கு வந்துள்ளார்.

கொலை செய்யப்பட்ட பெண் அவரின் உறவினர் என்பதால், அவரது வீட்டில் மகளை தங்க வைத்ததாகவும், அதன்போதே அவர் தனது மகளை வயது கூடிய நபரொருவருக்கு திருமணம் செய்து வைக்க முயன்றுள்ளதாகவும் சிறுமியின் தந்தை காவல்துறையினருக்கு வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதனால் கோபமடைந்த அவர், குறித்த பெண் பணிபுரியும் புத்தக விற்பனை நிலையத்திற்கு சென்று அவரை கொலை செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். Hiru

No comments

Powered by Blogger.