கடுகதி ரயிலில் மோதி 16 எருமைகள் பலி - ஓமந்தையில் சம்பவம்
- க. அகரன் -
வவுனியா ஓமந்தை பகுதியில் 16 எருமை மாடுகளை கடுகதி ரயிலில், இன்று காலை மோதுண்டு பலியாகியுள்ளன.
யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற ரயில், ஓமந்தை பகுதியில் மேச்சலில் ஈடுபட்டிருந்த எருமை மாடுகள் மீது மோதியது.
இதன் காரணமாக பல இலட்சம் பெறுமதியாக 16 எருமை மாடுகள் குறித்த இடத்திலேயே பலியாகியுள்ளது.
வவுனியா மாவட்டத்தில் மேச்சல் தரை இன்மையால் பலரும் தமது மாடுகளை மேச்சலுக்காக வேறு இடங்களுக்கு கொண்டு செல்ல முடியாத நிலையில் அவை வீதியோரங்கள் ரயில் தண்டவாளங்களுக்கு அருகில், இரை தேடி வரும் நிலையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த ரயிலேயே திருநாவல்குளம் பகுதியில் மோட்டார் சைக்கிளிலும் மோதியமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment