மையத்து எரிப்பதை சாதனையாக செய்தார்கள், சீனியில் 1538 மோசடி, புற்றுநோய் எண்னெய் - றிசாத் Mp (வீடியோ)
மனித பாவனைக்கு உகந்ததல்லாத எண்ணெய் உற்பத்தி செய்தும் அதனை விற்பனை செய்தும் உள்ளார்கள் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடியதுமான இவ்வாறான எண்ணெய் விற்பனை தொடர்பில் உடனடியாக நிறுத்தி இதன் பின்னால் உள்ளவர்களை தண்டிக்க இந்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிசாத் பதியுதீன் தெரிவித்தார்.
https://www.youtube.com/watch?v=FKhKt4P9BgE
மக்கள் காங்கிரஸ் கட்சியின் மத்திய குழு உறுப்பினர்களுடனான சந்திப்பு இன்று (04)கிண்ணியாவில் குறித்த கட்சியின் தேசிய அமைப்பாளரும் முன்னால் பிரதியமைச்சருமான அப்துல்லா மஹ்ரூப் தலைமையில் இடம் பெற்றுள்ளது. இதில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே மேற்கண்டவாறு தெரிவித்த அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில் சீனி மோசடி தொடர்பிலும் 1538 கோடி மோசடி இடம் பெற்றுள்ளது இது தொடர்பில் உரிய அரசியல்வாதிகள் திணைக்கள தலைவர் உள்ளிட்ட சம்மந்தப்பட்டோரே இந்த அரசு தண்டிக்க வேண்டும் என்றார்.
அமைப்பாளர் அல்ல தலைவர்
ReplyDelete