Header Ads



திருமணத்தில் மணமக்களுக்கு கொரோனா - 150 பேருக்கு PCR செய்ய நடவடிக்கை


கொழும்பின் புறநகர் பகுதியான வத்தளையில் நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நடைபெற்ற திருமண நிகழ்வில் இணைந்த தம்பதிக்கு கோவிட் தொற்று ஏற்பட்டுள்ளது.

திருமணம் முடிந்தவுடன் வெளிநாடு செல்வதற்காக மணமகன் மேற்கொண்ட PCR பரிசோதனையில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக உறுதியாகியுள்ளது. இதன் பின்னர் மணமகளுக்கு மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையில் அவருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

மணமகன் மற்றும் மணமகளுக்கு கொரோனா தொற்றியமையினால் அவர்களின் திருமண நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கும் கோவிட் தொற்று ஏற்பட்டிருக்கலாம் அச்சம் வெளியிடப்பட்டுள்ளத.

அதற்கமைய திருமண நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் PCR பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வில் கலந்துகொண்ட 150 பேரின் விலாசம் உள்ளிட்ட தகவல்களை பெற்றுக்கொண்ட சுகாதார அதிகாரிகள் அவர்களுக்கு தெளிவுப்படுத்திய நிலையில் PCR பரிசோதனைக்குட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.