தடை விதிக்கப்பட்ட 11 இஸ்லாமிய அமைப்புகளும் செய்யக் கூடாதவை - ஜனாதிபதியின் ஒப்பத்துடன் அறிவித்தல்
குறித்த அமைப்புகளை தடைசெய்வதற்கான அனுமதியினை சட்ட மா அதிபர் கடந்த வாரம் வழங்கியிருந்த நிலையிலேயே, தற்போது அந்த அமைப்புகளை தடைசெய்யும் அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கையொப்பத்துடன் வெளியாகியுள்ளது.
1979ஆம் ஆண்டின் 48ஆம் இலக்க பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ், 11 அமைப்புகளும் தடைசெய்யப்படுவதாக, அந்த வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தடை விதிக்கப்பட்டுள்ள 11 அமைப்புகள் நேற்று நள்ளிரவு வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் மூலம் தடைசெய்யப்பட்டுள்ளன.
நாட்டின் சமாதானத்தைத் தொடர்வதை உறுதிப்படுத்தும் பொருட்டு நன்நோக்குடனும் தேசிய பாதுகாப்பு, பொதுமக்கள் ஒழுங்கு மற்றும் சட்டவாட்சி என்பவற்றின் நலனிலும் மேற்கொள்ளப்பட்ட இலங்கை அரசாங்கத்தின் முயற்சிகளை முன்னெடுப்பதில், மேற்படி அமைப்புகள் தடைசெய்யப்படுவதாக அந்த வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
செய்யக் கூடாதவை
தடைவிதிக்கப்பட்டுள்ள அமைப்புகளின் அல்லது அமைப்புகளைப் பிரதிநிதிப்படுத்துகின்ற அல்லது அதன் சார்பில் செயலாற்றுகின்ற வேறேதேனும் அமைப்பின்,
(அ) உறுப்பினரொருவராக அல்லது அங்கத்தவரொருவராக இருத்தலாகாது.
(ஆ) அதற்குத் தலைமைத்துவம் அளித்தலாகாது.
(இ) சீருடையை, உடையை, சின்னத்தை, தனிக்குறியை அல்லது கொடியை அணிதலோ, வெளிக்காட்டுதலோ, ஏந்துதலோஅல்லது உடைமையில் வைத்திருத்தலோ ஆகாது,
(ஈ) கூட்டமொன்றை அழைத்தலோ, கூட்டுதலோ, நடாத்துதலோ அல்லது அதில் பங்குபற்றுதலோ ஆகாது.
(உ) உறுப்பாண்மையைப் பெறுதலோ அல்லது அதைச் சேருதலோ ஆகாது.
(ஊ) ஓர் உறுப்பினருக்கு, அங்கத்தவருக்கு அல்லது வேறெவரேனும் இணையாளருக்குப் புகலிடமளித்தலோ, அவரை மறைத்துவைத்தலோ அல்லது அவருக்கு உதவுதலோ ஆகாது.
(எ) மேம்பாட்டுக்கு உதவுதலோ, அதனை ஊக்குவித்தலோ, அதற்கு ஆதரவளித்தலோ, மதியுரையளித்தலோ, உதவுதலோ அல்லது அதன் சார்பில் செயலாற்றுதலோ ஆகாது.
(ஏ) ஏதேனும் செயற்பாட்டை அல்லது நிகழ்வை ஒழுங்குபடுத்தலோ அல்லது அதில் பங்குபற்றுதலோ ஆகாது.
(ஐ) பணத்தை அல்லது பொருட்களை நன்கொடையளித்தலோ அல்லது உதவுதொகையளித்தலோ ஆகாது.
(ஒ) அதற்காக அல்லது அதன் பொருட்களைப் பெறுதலோ, களஞ்சியப்படுத்தலோ, இடம்பெயர்த்தலோ, உடைமையில்வைத்திருத்தலோ அல்லது விநியோகித்தலோ ஆகாது,
(ஓ) நோக்கத்தை ஊக்குவித்தலோ அல்லது பிரதிநிதித்துவப்படுத்தலோ ஆகாது.
(ஒள) அதனோடு ஏதேனும் கொடுக்கல் வாங்கலில் ஈடுபடுதலாகாது, அல்லது
(ஃ) அதன் சார்பில் தகவலைப் பரப்புவித்தலாகாது.
எனவும் மேற்படி வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தடை விதிக்கப்பட்டுள்ள அமைப்புகள்
1. ஐக்கிய தௌஹீத் (தௌஹீத்) ஜமாஅத் (UTJ)
2. சிலோன் தௌஹீத் (தௌஹீத்) ஜமாஅத் (CTJ)
3. சிறீலங்கா தௌஹீத் (தௌஹீத்) ஜமாஅத் (SLTJ)
4. அகில இலங்கை தௌஹீத் (தௌஹீத்) ஜமாஅத் (ACTJ)
5. ஜம்மியதுல் அன்ஸாரி சுன்னதுல் மொஹமதியா (JASM) மறுபெயர் ஜம்மாஅத் அன்ஸாரிஸ் சுன்னதில் மொஹமதியா ஒழுங்கமைப்பு மறுபெயர் அகில இலங்கை ஜம் - ஈ - அது அன்ஸாரிஸ் சுன்னதில் மொஹம்மதியா மறுபெயர் அன்ஸாரிஸ் சுன்னதில் மொஹம்மதியா கழகம் மறுபெயர் ஜமாஅத் அன்ஸாரிஸ் சுன்னதில் மொஹம்மதியா
6. தாறுல் அதர் மறுபெயர் ஜாமிஉல் அதர் பள்ளிவாசல் மறுபெயர் தாறுல் அதர் குரான் மத்ரச மறுபெயர் தாறுல் அதர் அத்தபாவிய்யா
7. சிறீலங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கம் (SLISM) மறுபெயர் ஜம்இய்யா
8. இராக் மற்றும் சிரியா இஸ்லாமிய அரசு (ISIS) மறுபெயர் அல் - தௌலா அல் - இஸ்லாமியா தௌலா இஸ்லாமியா
9. அல்கய்தா அமைப்பு
10. சேவ் த பேர்ள்ஸ் அமைப்பு மறுபெயர் சேவ் த பேர்ள் சங்கம்
11. சுப்பர் முஸ்லிம் அமைப்பு
க. மார்கச்சட்டம் பேசக்கூடாது
ReplyDeleteங. தொப்பி இல்லாமல் பிரசங்கிக்கக்கூடாது
ச. பிறை பார்க்கக்கூடாது
ஞ. கழுத்தில் தக்பீர் கட்டக்கூடாது
and so on...
ஆரோக்கியமான கருத்துக்கள் ,இயக்கங்கள் இந்த உம்மத்திற்கு குடுத்த வரங்கல்.( 4 மதுஹப்புகள் போல )ஆனால் நாம் மட்டும் தான் சுவனம் செல்வோம் மற்றவர்கள் நரகம் செல்வோர் ,நாம் தான் முஸ்லிம், நீ எல்லாம் காபிர்கள் என்று இனி எந்த முஸ்லிமை பார்த்து சொல்ல முடியாது.
ReplyDeleteஇதன் பிறகு ஒரே பள்ளியில் கூட்டாக தொழுதல், ஒரே நாளில் முழு இலங்கையிலும் ஒரு நாள் தான் பெருநாள்.
சுருக்கம் : மிக சந்தோசம் ,ஜம்மியத்துல் உலமாசபைக்கு கட்டுப்பட்டு வாழும் ஒரு சமூகம் இலங்கையில் உருவாகும் இன்ஷா அல்லாஹா.
This comment has been removed by the author.
ReplyDeleteகொள்கை கோட்பாடுகளில் சிறு சிறு வேறுபாடுகள் தோன்றுவது அருட்கொடையானது ஆனால் அது சமூகத்தில் பிரிவினையைக் கொண்டு வரலாகாது. தான் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள்தான் என்று கூறிக் கொண்டு தனித்தனி பள்ளி தனித்தனி மதரசா தனித்தனி அடக்கஸ்தலம் வெட்கக்கேடு. அவசியம் குறைந்த அமல்களை விட சமூக ஒற்றுமைக்கு முக்கியத்துவம் வழங்கப்பட வில்லை. இஸ்லாமியரை ஒழுங்குபடுத்த வேறுசமூகத்தவர் சட்டமியற்ற வேண்டிய துர்ப்பாக்கிய நிலையை கொண்டுவந்த இஸ்லாமிய பொறுப்புதாரிகள் அனைவரும் வெட்கப்பட வேண்டும். மட்டுமல்ல அடிப்படை இஸ்லாமிய சட்டங்களில் மாற்றமில்லாது பல கொள்கைகளைக் கொண்ட மக்கள் சமூகத்ததை உள்வாங்கி வழிநடாத்தும் வல்லமை இலங்கை ஜம்யத்துல் உலமாவுக்கும் இல்லை என்பதும் துரதிஷ்டமானதே. இத்தடையானது இஸ்லாமியரின் மானத்தை வீதியில் கூறி விற்பதனைத் தடுக்குமாயின் சந்தோசமே. அவனவன் மார்க்கத்தை அவனவன் வீட்டோடு வைத்துக்கொள்வதற்கும் மற்றவர்களின் வழிமுறைக்கு மதிப்பழிப்பதற்கும் இத்தடையானது உதவுமாக இருந்தால், இலங்கையில் இஸ்லாமியரின் ஒழுக்க விழுமியம் மற்ற சமூகத்தவர்களை கவரும் விதத்தில் அமைந்து விடுவதுடன் தடை செய்வோரின் எண்ணங்களுக்கு எதிர்மறையான தாக்கத்தினை மிகக் குறுகிய எதிரகாலத்தில் ஏற்படுத்தி விடலாம். ஹுதைபிய்யா உடன்படிக்கையை மீட்டுப்பாருங்கள்.
ReplyDelete
ReplyDelete(நபியே! இன்னும்) நீர் கூறும்; "அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும் வழிப்படுங்கள்." ஆனால் அவர்கள் புறக்கணித்துத் திரும்பி விடுவார்களானால் - நிச்சயமாக அல்லாஹ் காஃபிர்களை நேசிப்பதில்லை.