ஒரு கிலோ சிவப்பு சீனியை 115 ரூபாவுக்கு சதொசவில் வாங்க முடியும் - அமைச்சர் பந்துல
எதிர்வரும் திங்கட்கிழமை முதல், ஒரு கிலோகிராம் சிவப்பு சீனியை, 115 ரூபாவுக்கு சதொச விற்பனையகங்களில் கொள்வனவு செய்யமுடியும் என, வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று -02- பிற்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு அவர் இதனை தெரிவித்துள்ளார்.
உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் சிவப்பு சீனி, சந்தைகளில் 150 முதல் 165 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில், வாடிக்கையாளருக்கு நன்மை பயக்கும் வகையில், சதொச விற்பனையகங்களில் ஒரு கிலோகிராம் சிவப்பு சீனிக்கான விலையினை, 115 ரூபாவாக குறைத்து அடுத்த வாரம் முதல் விற்பனை செய்வதற்கு தீர்மானித்துள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
Post a Comment