Header Ads



'பொலிஸாருக்கு 1000 ‌‌ரூபாய் வழங்கியவர் கைது'


பாணந்துறை போக்குவரத்துப் பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரிக்கு 1000 ‌‌ரூபாய் இலஞ்சம் வழங்க முயற்சித்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

சாரதி அனுமதிப் பத்திரமின்றி வாகனத்தை செலுத்தியக் குற்றத்துக்காக அவருக்கு எதிராகச் சட்டநடவடிக்கை எடுக்க முயற்சித்தப்போது, சந்தேகநபர் இலஞ்சம் வழங்க முயற்சித்தபோதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வாகன அனுமதிப் பத்திரமின்றி வாகனத்தை செலுத்தியமை, பொலிஸாருக்கு இலஞ்சம் வழங்க முயற்சித்தமை உள்ளிட்டக் குற்றச்சாட்டுக்களுக்காக சந்தேகநபருக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அவர் கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.