"The Tearful Trail" ஆவணப்படம், நாளை ஜெனீவாவில் வெளியீடு (இலங்கை முஸ்லிம்கள் பற்றியது)
- Muise Wahabdeen -
The Tearful Trail - "கண்ணீர் நிறைந்த பாதை" என்ற வரலாற்று சிறப்புமிக்க இந்த ஆவணப்படம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை ( 2021.03.12) ஜெனீவாவில் வெளியிடப்படவுள்ளது. வரலாற்றில் முதல் தடவையாக இலங்கை சிறுபான்மை முஸ்லிம்கள் இதுவரை காலமும் எதிர்நோக்கிய பிரச்சினைகள் மற்றும் மனித உரிமை மீறல்களை உள்ளடக்கிய இந்த ஆவணப்படத்தை பல தேசிய விருதுகளை வென்ற ஊடகவியலாளர் ஒருவர் தயாரித்துள்ளார். ஐ.நா. 46வது மனித உரிமைகள் பேரவை நடைபெற்றுவரும் இச்சந்தர்ப்பத்தில் இந்த ஆவணப்படத்தை வெளியிட ஜெனீவாவை தளமாக கொண்டு இயங்கும் Universal Human Rights Council (UHRC) அமைப்பு சகல நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது.
Virtual முறையில் இடம்பெறவுள்ள இந்த வெளியிட்டு நிகழ்வில் பல நாடுகளைச் சேர்ந்த மனித உரிமை செயற்பாட்டாளர்கள், வெளிநாட்டு தூதுவர்கள், உள்நாட்டு வெளிநாட்டு அரசியல்வாதிகள், இராஜதந்திரிகள், புத்திஜீவிகள், ஊடகவியலாளர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொள்ளவுள்ளனர். இதனையடுத்து ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் சம்பந்தப்பட்ட தரப்பினர்களுக்கு இந்த ஆவணப்படம் கையளிக்கப்படவுள்ளது.
பார்ப்போம். உண்மைகள் வெளிவரட்டும் இன்ஸா அல்லாஹ்.நியாஸ் இப்றாஹிம்.
ReplyDeletereally great job
ReplyDeleteweld one