Header Ads



வரலாற்றில் முதன்முறையாக பாராளுமன்றத்திற்கு படகில் செல்ல மதுர Mp க்கு உத்தியோகபூர்வ அனுமதி


பாராளுமன்றத்திற்கு படகில் வருவதற்கு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் மதுர விதானகேவின் கோரிக்கைக்கு சபாநாயரின் அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது. 

வரலாற்றில் முதன்முறையாக பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு உத்தியோகபூர்வமாக அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே அத தெரண செய்திப்பிரிவிற்கு தெரிவித்தார். 

அதேபோல், எதிர்காலத்தில் கொழும்பு நகரின் வாகன நெரிசலுக்கு தீர்வாக இதனை செயற்படுத்த எதிர்ப்பார்த்துள்ளதாக அவர் தெரிவித்தார். 

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், 

இலங்கையில் முதன்முறையாக பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் படகில் பாராளுமன்றம் செல்லும் நாள் இன்று. நான் கடந்த கன்னி அமர்வின் போது உத்தியோகபூர்வமற்ற வகையில் பாராளுமன்றத்திற்கு சென்றேன். எனினும் இன்று அனைத்து சட்டத் திட்டங்களுக்கு அமைவாக நீர் மார்க்கமாக பாராளுமன்றத்திற்கு செல்ல புறப்பட்டேன். இதனூடாக நீர் போக்குவரத்தை மேம்படுத்துவற்கு எதிர்ப்பார்ப்பதாக அவர் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.