அமைச்சர் தினேஷ் குணவர்தன, நம்நாட்டின் வெளியுறவு அமைச்சரா..? நளின் Mp க்கு சந்தேகம்
ஐக்கிய மக்கள் சக்தி கட்சி தனது இரங்கலை மறைந்த சங்கைக்குரிய கொடுகொட தம்மாவாச தேரருக்கு வழங்குவதாக கூறி இன்றைய ஊடக சந்திப்பை ஆரம்பித்த அவர்,புத்த சாசனத்திற்கு மத ரீதியான பெரும் பங்களிப்பைச் செய்த அமரபுர மகா நிகாயாவின் தலைமை தேர்ர் என மேலும் தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய சுற்றுச் சூழல் பாதுகாப்புக் குழு இன்று பாரிய போராட்டத்தை நடத்துகிறது.இது அமைதியான முறையில் மேற்கொள்ளப்பட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில், கிராமங்களுக்கு சென்ற ஜனாதிபதி, சுற்றுச் சூழலுக்கு சேதம் விளைவித்தவர் நான் அல்ல என்று கூறுகின்றார், ஆனால் அதைத் தடுக்கும் பொறுப்பு அவருக்கு உள்ளது.சிங்கராஜாவுக்குள் இரண்டு தொட்டிகள் கட்டப்பட்டு வருவதாக அமைச்சர் சாமல் ராஜபக்ஷ கூறுகிறார். ஏற்கனவே உள்ள ஒரு பகுதி அழிக்கப்பட்டுள்ளது. பல்வேறு காரணிகளால் உலக பாரம்பரிய தளம் அது. இந்த அரசாங்கம் சிங்கராஜாவின் மதிப்பை உணரவில்லை. கிராமத்துடனான உரையாடலில் ஜனாதிபதி பல கடலடளைகளைநிடுகிறார்.ஒரு அமைச்சர் அவர்கள் வாழ ஒக்சிஜன் தேவையில்லை என்று கூறினார். ஜனாதிபதியின் கட்டுப்பாட்டிற்கு அப்பால் சூழல் அழிக்கப்பட்டு வருகிறது. சிங்கராஜாவின் அழிவு பற்றி பாக்யா என்ற மாணவி பேசினார் ஆனால் அவரை பாராட்டுவதை விட்டு, வாக்கு மூலம் பெற்றுள்ளனர்.பாக்கியா வெளிப்படுத்தியதை தடுப்பதற்கு பதிலாக பாக்கியாவிற்கு பதிலளிக்க முற்பட்டனர்.
ஜெனீவா தேர்தலில் நேற்று ஆதரவாக 22 வாக்குகளும், எதிராக 11 வாக்குகளையும் பெற்றது. 14 நாடுகள் வாக்களிப்பதைத் தவிர்த்தன. அமைச்சர் தினேஷ் குணவர்தன சூரியின் கூற்றுப்படி, வாக்களிக்காதவர்கள் எதிர்த்தவர்கள் போன்ற பிரமையில் அவர் வெற்றி பெற்றதை போல் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்ததை நாங்கள் கண்டோம். இவர் நம் நாட்டின் வெளியுறவு அமைச்சரா? எங்களுக்கு வாக்குகள் வழங்கப்படவில்லை.வரலாற்றில் எங்களுக்கு வாக்களித்தவர்கள் குறிப்பாக இந்தியா, ஜப்பான் போன்ற நாடுகள் இம்முறை வாக்களிக்கவில்லை. இந்தியா எங்கள் அண்டை நாடு. ஜப்பான் கோபமடைந்துள்ளது.தென் கொரியா வாக்களிக்கவில்லை.இதன் மூலம் எமக்கு தடைகள் ஏற்ப்படுத்தலாம்.கொரியா எம்மை தடை செய்ய முற்ப்பட்டால், ஒரு பெரிய எண்ணிக்கையிலான நம் நாட்டில் இளைஞர்கள் அந்த நாட்டில் வேலை இழக்க நேரிடும். சிவில் நிர்வாகத்தில் அரசியல் தலையீடுகள், இனவாதம்,வழக்குகளில் அரசியல் தலையீடு போன்ற சமீபத்திய அரசாங்கத்தின் நடவடிக்கைகள் தான் இதற்கு பிரதான காரணம்.நடு நிலையற்ற வெளி நாட்டுக் கொள்கையை ஒரு பக்கம் கூடிய சாய்வு தான் பின்நோக்கிய நிலைக்கி காரணமாகும்.அரசாங்கத்தின் வெளியுறவுக் கொள்கையில் கடுமையான சிக்கல்கள் உள்ளன.
இந்த அரசாங்கம் ஆணைக்குழுக்களுக்கு ஒரு ஆணைக்குழுவை அமைத்து வருகிறது. ஈஸ்டர் தாக்குதல் ஆணைக்குழுவிற்கு நன்கு படித்த நபர்களைக் கொண்ட மீளாய்வு குழுவை அரசாங்கம் நியமித்துள்ளது.நியாயமான பரிந்துரைகளை முன்வைப்பார்கள்.மக்கள் புத்தியுள்ளவர்கள் என்று தெரிவித்தார்.
Post a Comment