அசோக் CID யில் முன்னிலை - கட்சியின் உயர் மட்டத்தினரும் சென்றனர்
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அசோக் அபேசிங்க குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பசில் ராஜபக்ஷ ஆகியோருக்கு தொடர்புள்ளதாக, பாராளுமன்ற உறுப்பினர் அசோக் அபேசிங்க அரசியல் கூட்டம் ஒன்றில் தெரிவித்த கருத்து தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் அழைக்கப்பட்டுள்ளார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் செய்துள்ள முறைப்பாட்டுக்கமைய, பாராளுமன்ற உறுப்பினர் அசோக் அபேசிங்கவுக்கு குற்றப் புலனாய்வு திணைக்களம் அழைப்பு விடுத்துள்ளது.
குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு இதற்கு முன்னர் இரண்டு தினங்கள் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தும் அவர் முன்னிலையாகவில்லை.
SHINNA MOOLAI SAJITHA KAANAVILLAI.
ReplyDelete