Header Ads



ரணில், ஹக்கீம், பொன்சேக்கா அரசியல் பழிவாங்கலில் பங்கேற்றனர் - ஆணைக்குழு அறிக்கையில் குற்றச்சாட்டு


- TL -

நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் இடம்பெற்ற அரசியல்பழிவாங்கல் நடவடிக்கைகளிற்கு அந்த அரசாங்கத்தின் பிரதமரும் ஐந்து அமைச்சாகளும் காரணம் என அரசியல்பழிவாங்கல் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றத்தில் நேற்று சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையே இவ்வாறு தெரிவித்துள்ளது.

நல்லாட்சி அரசாங்கத்தின் பிரதமர் ரணில்விக்கிரமசிங்க அமைச்சர்கள் மங்களசமரவீர ராஜித சேனாரட்ண சரத்பொன்சேகா ரவூப்ஹக்கீம் மலிக்சமரவீர ஆகியோரே அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகளிற்கு காரணம் என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஜேவிபியின் தலைவர் தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயம்பதி விக்கிரமரட்ண உட்பட பலர் மீது குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளது.

No comments

Powered by Blogger.