Header Ads



ஓட்டமாவடியில் ஜனாஸாக்களை அடக்க, காணி வழங்கிய ஜௌபரின் விளக்கம்


(எச்.எம்.எம்.பர்ஸான்)

கொரோனா தொற்றினால் மரணமடைந்த நபர்களை நல்லடக்கம் செய்வதற்கு வாழைச்சேனையைச் சேர்ந்த எம்.எப்.எம்.ஜௌபர் என்பவர் தனது 3 ஏக்கர் காணியை வழங்கியுள்ளதால் அவருக்கு சமூக ஊடகங்களிலும், பொதுவெளியிலும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

கொரோனா தொற்றால் மரணமடைந்த நபர்களை அடக்கம் செய்ய தனது காணி பொருத்தமாக காணப்பட்டதால் அதனை மனமுவர்ந்து ஜௌபர் வழங்கியுள்ளார்.

இவ்வாறு காணியை வழங்கிய ஜௌபருக்கு அரசியல்வாதிகள், அதிகாரிகள், பள்ளிவாசல்கள், சமூக நிறுவனங்கள், முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் எனப்பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

இது தொடர்பில் ஜெளபர் கூறியதாவது,

கொரோனா தொற்றினால் மரணமடைந்த நபர்களை நல்லடக்கம் செய்வதற்கு ஓட்டமாவடி மஜ்மா நகர் பகுதியில் காணி அடையாளப்படுத்தப்பட்டிருந்தது.

அடையாளப்படுத்தப்பட்டிருந்த காணியை பார்வையிட்ட நிபுணர் குழுவினர் அதை விட அதன் அருகிலுள்ள மூன்று ஏக்கர் காணி பொருத்தமாக அமையும் என்று கூறியுள்ளனர்.

இந்நிலையில், என்னைத் தொடர்பு கொண்ட அதிகாரிகள் காணி விடயம் தொடர்பில் எனது நிலைப்பாட்டை கேட்டனர்.

குறித்த எனது காணியில் ஜனாஸாக்களை அடக்கம் செய்ய சம்மதம் தெரிவித்து அதனை நான் வழங்கியுள்ளேன்.

அந்தக் காணியை நான் ஒரு நபரிடம் பணம் கொடுத்து பெற்று பராமரித்து வந்தத நிலையில், அதற்காக அரசாங்கம் வழங்கும் ஒப்பத்தினை பெறவும் விண்ணப்பித்துள்ளேன் என்றார்.


No comments

Powered by Blogger.