Header Ads



சாரா இந்தியாவிற்கு தப்பிச்சென்றது என்பது ஊகமே தவிர உறுதியான தகவல்கள் இல்லை - கம்மன்பில


- TL -

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் தொடர்புபட்டவர் என கருதப்படும் சாராவை நாடு கடத்துமாறு இந்திய அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுப்பதற்கு அரசாங்கம் தயார் என அமைச்சரவை பேச்சாளர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

சாரா எங்கிருக்கின்றார் என்பது குறித்த உறுதியான தகவல்கள் கிடைத்தால் இந்தியாவிடம் அவரை நாடு கடத்துவதற்கான வேண்டுகோளை விடுப்பதற்கு தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் எந்த நபரையும் தேடி கண்டுபிடிப்பதற்கு அரசாங்கம் தயங்காது என அவர் தெரிவித்துள்ளார்.

ஊடகங்களில் வெளியான தகவல்கள் போன்று சாரா இந்தியாவிற்கு தப்பிச்சென்றிருந்தால் அவரை நாடு கடத்துமாறு அரசாங்கம் வேண்டுகோள் விடுக்கும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஊடகங்கள் தெரிவிப்பது போல அவர் சட்டவிரோதமாக இந்தியாவிற்கு சென்றிருந்தால் அதிகாரிகள் சட்ட ஏற்பாடுகளை பயன்படுத்தி அவரை நாட்டிற்கு கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

எனினும் சாரா இந்தியாவிற்கு தப்பிச்சென்றலாம் என்பது ஊகமே தவிர உறுதியான தகவல்கள் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

  1. உங்களுக்கு தானே yenku ஒழிந்து இருக்கிறாள் yentru தெரியும்

    ReplyDelete

Powered by Blogger.