Header Ads



பிரான்ஸ் முழுவதும் மீண்டும் ஊரடங்கு, பள்ளிகள் கடைகள் மூடல், ஜனாதிபதி மேக்ரான் சற்று முன் அறிவிப்பு


பிரான்ஸ் வரும் மே மாதத்தின் நடுப்பகுதியில் இருந்து சகஜ நிலைக்கு திரும்பும் என்று நம்புவதாக ஜனாதிபதி மேக்ரான் கூறியுள்ளார்.

ஐரோப்பாவில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பிரான்ஸில் இயல்பு நிலை திரும்புவது கடினம், ஊரடங்கு இன்னும் சில மாதங்கள் தொடரும் என்று தகவல் வெளியானது.

இந்நிலையில், ஜனாதிபதி மேக்ரான் இன்று -31- நாட்டு மக்களிடையே உரையாற்றினார்.

அப்போது கொரோனா பரவல் அதிகம் உள்ள 19 மாவட்டங்களில் நடைமுறையில் உள்ள ஊரடங்கு வரும் சனிக்கிழமை முதல் நாடு முழுவதும் நடைமுறைக்கு வரும். இரவு 7 மணிமுதல் ஊரடங்கு நடைமுறையில் இருக்கும்.

அனைத்து கடைகளும் மூடப்படும். அனைத்து ஆரம்ப பாடசாலைகள், பாடசாலைகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் என அனைத்தும் அடுத்த மூன்று வாரங்களுக்கு மூடப்படும் என்று அறிவித்தார்.

வரும் 26-ஆம் திகதி மீண்டும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் போன்றவை திறக்கப்படும். நாட்டில் தடுப்பூசி அதிகம் போடுவதே சிறந்த தீர்வாக இருக்கும் என்று கூறிய அவர், ஏப்ரல் 16 ஆம் திகதியில் இருந்து 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசிகள் போடப்படும் என்றும் மே 5 ஆம் திகதி முதல் 50 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசிகள் போடப்படும் எனவும் தெரிவித்தார்.

பகல் நேரத்தில், வீட்டில் இருந்து 10 கிலோ மீற்றர் தூரம் மட்டுமே பயணிக்க முடியும், அதற்கு மேலே செல்ல வேண்டும் என்றால் அனுமதி பத்திரம் அவசியம், இல்லையெனில் 135 பவுண்ட் அபராதம் விதிக்கப்படும்.

நாடு வரும் மே மாதம் நடுப்பகுதியில் மீண்டும் சகஜநிலைக்கு திரும்பும் என்று நம்புவதாக கூறி முடித்தார்.

1 comment:

Powered by Blogger.