தான் ஒரு கழுதை என்கிறார் மம்தா பானர்ஜி
இந்தநிலையில், நேற்று நந்திகிராம் தொகுதிக்கு உட்பட்ட காந்தி தக்ஷின் என்ற இடத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் மம்தா பானர்ஜி பங்கேற்றார். அதில் அவர் பேசியதாவது:-
சுவேந்து அதிகாரி ஒரு துரோகி. பிளாசி போரில் வங்காளத்தின் கடைசி நவாப்பான சிராஜுத்தவுலாவின் தளபதியாக இருந்த மீர் ஜாபர், நவாப்புக்கு துரோகம் செய்ததால்தான் ஆங்கிலேயர் ஆட்சி அமைந்தது. அத்தகைய மீர் ஜாபர் போன்றவர்தான் சுவேந்து அதிகாரி.
அவருடைய குடும்பத்தினர் இந்த மாவட்டத்தை ஜமீன்தார் போன்று ஆண்டு வருகிறார்கள். இங்கு நான் பொதுக்கூட்டம் கூட நடத்த முடியவில்லை.
நந்திகிராமில் சுகாதாரம், சாலை உள்ளிட்ட அனைத்து பணிகளும் எனது அரசால் செய்யப்பட்டவை. சுவேந்து அதிகாரி குடும்பம் செய்தவை அல்ல.
சுவேந்து அதிகாரி குடும்பம், ரூ.5 ஆயிரம் கோடி சொத்து சேர்த்து விட்டதாக நான் கேள்விப்பட்டேன். அது எனக்கு தெரியாது. அவர்களின் உண்மை முகத்தை அறியாமல் போய்விட்டேன். நான் ஒரு பெரிய கழுதை.
நான் மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு, சுவேந்து அதிகாரி குடும்பத்தின் சொத்து குவிப்பு பற்றி விசாரணை நடத்தப்படும். அவர்கள் ஓட்டு வாங்க பணத்தை பயன்படுத்துவார்கள். ஆனால் அவர்களுக்கு ஓட்டு போடாதீர்கள்.
பா.ஜனதாவில் குண்டர்களும், கயவர்களும்தான் உள்ளனர். எனவே, மாநிலத்தில் அமைதியை நிலைநாட்டி, வளர்ச்சியை விரைவுபடுத்த பா.ஜனதாவை விரட்டி அடியுங்கள்.
இவ்வாறு மம்தா பானர்ஜி பேசினார்.
Post a Comment