அரசாங்கத்தின் முதுகில் குத்திவிட்டார் விமல் - பொதுஜன பெரமுன கடும் சீற்றம்
அமைச்சர் விமல்வீரவன்ச அரசாங்கத்தின் முதுகில் குத்திவிட்டார் என ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் நாடாளுமன்ற குழு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன என ஐலன்ட் செய்தி வெளியிட்டுள்ளது.
அரசாங்கத்தின் சில தரப்பினருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாத்பதியுதீனிற்கும் இடையில் இரகசிய தொடர்புகள் உள்ளதாக அமைச்சர் விமல்வீரவன்ச முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் நாடாளுமன்ற குழு வட்டாரங்கள் கடும் அதிருப்பதியும் சீற்றமும் வெளியிட்டுள்ளன.
அமைச்சரின் கருத்தின் நோக்கம் பொதுஜனபெரமுனவை பலவீனப்படுத்துவதே என கட்சியின் நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்துள்ளாக ஐலண்ட் செய்தி வெளியிட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை காரணமாக அரசாங்கம் பெரும் அழுத்தத்திற்குள்ளாகியுள்ள நிலையில் அமைச்சரின் இந்த கருத்து சரிசெய்யப்படமுடியாத பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன என கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
(தினக்குரல்)
Post a Comment