மிகப்பெரிய வீரர் ஓய்வு பெற்றாலும், இந்திய அணி தடுமாறாது: முகமது ஷமி
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரை இந்தியா 2-1 எனக் கைப்பற்றியது. விராட் கோலி, பும்ரா, முகமது ஷமி, இஷாந்த் சர்மா, ரோகித் சர்மா, ஜடேஜா, அஷ்வின், உமேஷ் யாதவ் இல்லாமலேயே இளம் வீரர்கள் அசத்தினார்கள்.
டி. நடராஜன், வாஷிங்டன் சுந்தர் போன்றவர்கள் நெட் பவுலர்களான அழைத்துச் செல்லப்பட்டனர். ஆனால் டெஸ்ட் போட்டியில் அசத்தினார்கள்.
இதுகுறித்து முகமது ஷமி கூறுகையில் ‘‘இளம் வீரர்கள் எங்களிடம் இருந்து எடுத்துக் கொள்ள தயாராக இருக்கிறார்கள். நாங்கள் ஓய்வு பெறும்போது இது நடக்கும். அதிகமாக விளையாடும்போது, சிறந்த திறனை பெறுவார்கள். நாங்கள் போட்டியை முடிக்கும்போது மாற்றம் சீராக நடைபெறும்
ஒரு மிகப்பெரிய வீரர் ஓய்வு பெற்றாலும், இந்திய அணி தடுமாற்றம் அடையாது. வெளியில் இருக்கும் வீரர்கள் தயாராக இருக்கிறார்கள். அனுபவம் எப்போதும் தேவைப்படுகிறது. இளைஞர்கள் அதை சரியான நேரத்தில் பெறுவார்கள்.
Post a Comment