Header Ads



ரஞ்சனுக்காக விடுமுறை கோரிய சஜித் - சபாநாயகர் நிராகரிப்பு


சிறையில் அடைக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க சார்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச முன்வைத்த விடுமுறை கோரிக்கையை சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன இன்று (10) நிராகரித்தார்.

உயர் நீதிமன்றத்தால் தண்டனை பெற்ற பாராளுமன்ற உறுப்பினரை  நாடாளுமன்றுக்கு தன்னால் வரவழைக்க முடியாது என்று அவர் கூறியுள்ளார்.

அத்துடன், அவர் சார்பாக விடுமுறை கோரிக்கையை ஏற்க முடியாது என்றும், இந்த விவகாரம் தொடர்பாக நிலுவையில் இருக்கும் நீதிமன்ற முடிவு விரைவில் கிடைக்கப்பெறும் என்றும் சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

  1. SHINNA MOOLAI. PAAVAM. YAARAVATHU ATHAI KELU
    ITHAI KELU ENRU SHONNAAL POTHUM. PARALUMANRATHILKOODA KELVI KETPAAN.
    SHONDA PUTHI IRUNDAALTHANEY.

    ReplyDelete

Powered by Blogger.