நவ்பர் மௌலவியே ஈஸ்டர் தாக்குதலின் சூத்திரதாரி - அமைச்சர் சரத் வீரசேகர
- TL -
நவ்பர் மௌலவியே உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரி என புலனாய்வு பிரிவினர் உறுதி செய்துள்ளனர் என தெரிவித்துள்ள பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் இப்ராஹிம் சகோதரர்களும் பல அமைப்புகளும் தாக்குதலை மேற்கொள்வதற்காக தவ்ஹீத் ஜமாத் அமைப்பிற்கு நிதி வழங்கியுள்ளன என அவர் தெரிவித்துள்ளார்.
கட்டாரை தளமாக கொண்ட நவ்பர் மௌவலி ஜஹ்ரான் ஹாசிமை தாக்குதலை மேற்கொள்ளுமாறு தூண்டினார் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் பிறந்த அவுஸ்திரேலிய பிரஜைகளான லுக்மான் தலிப் லுக்மான் தலிப் அஹமட் என்ற இரு சகோதரர்கள் ஜஹ்ரான் ஹாசிம் மாலைதீவை சேர்ந்த நால்வரை சந்திப்பதற்கான ஏற்பாடுகளை செய்தார்கள் எனவும் சரத்வீரசேகர தெரிவித்துள்ளார்.
2016 முதல் தாக்குதல் இடம்பெறும்வரை இவர்கள் ஜஹ்ரான் ஹாசிமை அடிக்கடி சந்தித்துள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.
சேவ் த பேர்ல் என்ற அமைப்பு ஜஹ்ரான் ஹாசிமிற்கு சட்டரீதியான உதவிகளை வழங்கியுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்
Post a Comment