ஸ்கார்ப் அணியவும் தடை விதிக்க கோரிக்கை - சுவிஸில் வாழும் முஸ்லிம்களுக்கு பேரதிர்ச்சி
ஆனால் அவ்வாறான கோரிக்கைக்கு இஸ்லாமிய அமைப்புகள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.
சுவிட்சர்லாந்தில் இஸ்லாமிய பெண்கள் பொதுவெளியில் புர்கா எனப்படும் முகம் மறைக்கும் ஆடைகளை அணிய எதிர்ப்பு தெரிவித்து, பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, 51.2% ஆதரவுடன் அது நிறைவேற்றப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தின் 6 மண்டலங்களை தவிர எஞ்சிய அனைத்து மண்டலங்களும் புர்கா தடைக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் பாடசாலை மற்றும் சிறார் பள்ளிகளில் இஸ்லாமிய சிறுமிகள் தலையில் ஸ்கார்ஃப் அணிவதற்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் மத்திய தேசிய கவுன்சிலர் மரியன்னே பைண்டர்-கெல்லர் தற்போது முன்வந்துள்ளார்.
ஒரு பாடசாலை ஆசிரியரான தமக்கு, ஏற்பட்ட அனுபவத்தை அடுத்தே, இவ்வாறான கோரிக்கையை முன்வைத்துள்ளதாக பைண்டர் தெரிவித்துள்ளார்.
தலையில் நாள் முழுவதும் ஸ்கார்ஃப் அணிந்து கொண்டு, பாடசாலை முன்னெடுக்கும் எவ்வித நிகழ்ச்சிகளிலும் பங்கேற்காமல், அடிப்படை உரிமைகள் மறுக்கப்படும் சிறார்களுக்காகவே தமது இந்த முயற்சி என அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த டிசம்பர் மாதம் இந்த விவகாரம் தொடர்பில் பைண்டர் பெடரல் கவுன்சிலுக்கு ஒரு வேண்டுகோளை முன்வைத்திருந்தார்.
ஆனால் ஸ்கார்ஃப் தடை செய்யும் பெடரல் கவுன்சிலுக்கு இல்லை என அந்த வேண்டுகோளை நிராகரித்திருந்தது.
தற்போது மீண்டும் தமது முயற்சியை தொடங்கியுள்ள பைண்டருக்கு இஸ்லாமிய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
ஒரு மதத்தின் அடிப்படை கொள்கைகளில் எது சரி, எது தவறு என்பதை வெளியாட்கள் தீர்மானிக்கக்கூடாது என இஸ்லாமிய அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன.
Post a Comment