தங்கத்தை எடுக்க, மண்வெட்டிகளுடன் ஓடிய மக்கள் - வைரலாகியுள்ள வீடியோ இணைப்பு
காங்கோவில் உள்ள மலையொன்றில் வெட்டியெடுக்கப்பட்ட மண்ணில் 60 முதல் 90 சதவீதம் வரையில் தங்கத்தாது இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. காங்கோவின் தெற்கு கிவு மாகாணத்தில் லுகிகி என்ற கிராமத்தில் உள்ள சிலர் மண்ணில் தங்கம் கலந்திருப்பதைக் கண்டறிந்துள்ளனர். அவர்கள் மூலம் இந்த விடயம் கிராமவாசிகள் மத்தியில் காட்டுத் தீ போல் பரவியது.
இதனையடுத்து, கிராமவாசிகள் மண்வெட்டி உள்ளிட்ட ஆயுதங்களுடன் மலைக்கு சென்று மண்ணை வெட்டியெடுக்க ஆரம்பித்தனர். மண்ணை வீடுகளுக்கு எடுத்துச்செல்ல ஆரம்பித்தனர். பின்னர் அவற்றை தண்ணீரில் போட்டு அலசி தங்கத்தை பிரித்தெடுத்தனர்.
இது தொடர்பான வீடியோவை அகமது அல்கோபரி என்ற பத்திரிகையாளர் ட்விட்டரில் பகிர்ந்ததைத் தொடர்ந்து, அது சமூக வலைத்தளங்களில் வைரலானது.
நபி மொழி உண்மையாகப் போகிறதா?
ReplyDeleteஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(மேற்காசியாவில் பாயும்) யூப்ரடீஸ் நதியானது வற்றி, தங்க மலை ஒன்றை வெளிப்படுத்தாத வரை யுக முடிவு நாள் வராது. அதற்காக (உரிமை கொண்டாடி) மக்கள் சண்டையிட்டுக்கொள்வர். அப்போது ஒவ்வொரு நூறு பேரிலிருந்தும் தொண்ணூற்றொன்பது பேர் கொல்லப்படுவர். அவர்களில் ஒவ்வொருவரும் "உயிர் பிழைப்பவர் நானாக இருக்க வேண்டுமே!" என்று கூறுவர்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் தக்வான் (ரஹ்) அவர்கள், "அதை நீ கண்டால், அதை நெருங்க வேண்டாம்" என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாகக் கூடுதலாக அறிவிக்கிறார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம் : 5548.
அத்தியாயம் : 52. குழப்பங்களும், மறுமை நாளின் அடையாளங்களும்