Header Ads



புர்காவை தடை செய்யுமாறு முஸ்லிம் அரசியல்வாதிகளும் கூறினர், முதலில் நான் பரிந்துரைக்கவில்லை


புர்கா தடைக்கான அமைச்சரவை பத்திரத்தை தான் அமைச்சரவையில் முன்வைத்துள்ளதாகவும், அந்த அமைச்சரவை பத்திரம் குறித்து இதுவரை கலந்துரையாடல் நடத்தப்படவில்லை எனவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவிக்கின்றார்.

பிபிசி தமிழுக்கு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

எதிர்வரும் நாட்களில் இந்த அமைச்சரவை பத்திரம் தொடர்பிலான கலந்துரையாடல்கள் இடம்பெறும் எனவும் அவர் கூறினார்.

அமைச்சரவையின் நிகழ்ச்சி நிரலுக்குள் இந்த அமைச்சரவை பத்திரம் உள்வாங்கப்பட்டு, விரைவில் கலந்துரையாடப்படும் எனவும் அவர் தெரிவிக்கின்றார்.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை நடத்திய நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் அறிக்கையில், புர்கா தடை செய்யப்பட வேண்டும் என்ற பரிந்துரை இடம்பெற்றுள்ளதாக சரத் வீரசேகர குறிப்பிடுகின்றார்.

இந்த பரிந்துரைகளை முன்வைத்தவர்களில் முஸ்லிம் அரசியல்வாதிகள் மற்றும் எதிர்கட்சி அரசியல்வாதிகளும் உள்ளதாக அவர் கூறுகின்றார்.

புர்கா தடை செய்யப்பட வேண்டும் என முதலில் தான் பரிந்துரை செய்யவில்லையென கூறிய அவர், தனக்கு முன்னர் பலர் இதனை கூறியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தெரிவுக்குழு மாத்திரமன்றி, ஜனாதிபதி ஆணைக்குழுவும் இதே பரிந்துரைகளை முன்வைத்துள்ளதாகவும் அவர் நினைவூட்டினார்.

மேலும், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் இலங்கை விஜயத்திற்கு பின்னரே, ஜனாஸா அடக்கம் செய்ய அனுமதி வழங்கப்பட்டதாக கூறப்படும் கருத்தை, சரத் வீரசேகர நிராகரித்திருந்தார்.

ஜனாஸா அடக்கம் செய்யும் விவகாரமானது, அரசியல் தீர்மானம் கிடையாது எனவும், அது சுகாதார தரப்பினரின் தீர்மானம் எனவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர குறிப்பிடுகின்றார்.

11 comments:

  1. IVAR PESHUVATHU UNMAI ENRU IRUNDAAL , PARINDURAI SHEITHA
    MUSLIM ARASHIALVATHIKALUM
    ETHIRKATCHI ARASHIALVATHIKALIN
    PEYARKALAI, SARATH VEERASEKARA
    VELIYIDUVAARAA???.

    ReplyDelete
  2. Can he inform the public who is that Muslim Politician, wanted to remove. If he means, he must be Muzammil. He is only by name Muslim.

    ReplyDelete
  3. Can he inform the public who is that Muslim Politician, wanted to remove. If he means, he must be there is one only by name Muslim. He is not recognized by the Muslim Community. .

    ReplyDelete
  4. Can he inform the public who is that Muslim Politician, wanted to remove. If he means, he must be there is one only by name Muslim. He is not recognized by the Muslim Community.

    ReplyDelete
  5. நடிகன் உலகமஹாநடிகன்

    ReplyDelete
  6. GOOD to know about this intention of BURGA band and ISLAMIC Books band.
    IF OIC and Islamic countries know about your target... They can think of supporting or Not at Geneva case.. today.

    ReplyDelete
  7. அடி முட்டாள் . மைக் கிடைத்ததற்காக வாய்க்கு வருவதையெல்லாம் வாந்தி எடுத்தல் ? இன்று இந்த அரசாங்கத்தை யார் நடத்துவது என்றே தெறியவில்லை.

    ReplyDelete
  8. ஹாஹாஹா. அம்மண்டோய்!

    குடிகார பேச்சு விடிஞ்சா போச்சு என்றார்கள் மக்கள்!

    ReplyDelete
  9. Your are right MR. Some of our own Muslim Munafeeks are behind all these not you.
    Munafeeks..

    ReplyDelete
  10. Shame on you...country under comedians hand now

    ReplyDelete
  11. If u r real piblic security minister, take immediate action that Passara bus accident culprits, either RDA or Traffic police!!!!!

    ReplyDelete

Powered by Blogger.