மாகாணத் தேர்தலில் சு.க.யில் போட்டியிட விரும்புகிறீர்களா..?
மாகாண சபை தேர்தலில் போட்டியிட விரும்புவோருக்கு, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அழைப்பு விடுத்துள்ளது.
ஆர்வமுள்ளவர்கள் மார்ச் மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்க முடியம் என, கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
புதியவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கும் வகையில் ஸ்ரீ லங்கா சதந்திரக் கட்சி இவ்வாறு விண்ணப்பங்களை கோரியுள்ளது.
Post a Comment