Header Ads



நாம் பேச வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம், மத்ரசா பரீட்சை முறையில் மாற்றம் தேவை..!


- முப்தி. யூசுப் ஹனிபா -

இவ்வருட  க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் இஸ்லாம் பாட வினாத்தாளைப் பார்த்த போது என் மனதுக்குள் தோன்றிய சில விடயங்களை இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன். தயவு செய்து யாரும் இதனை விமர்சனமாகப் பார்க்காமல் நேர்மறையாகப் பாருங்கள்.

மத்ஸாக்களின் கல்வித் திட்டத்திற்கும் பாடசாலையில் கற்பிக்கப்படும் இஸ்லாம் பாடத்திற்கும் இடையில் வித்தியாசம் இருக்கிறது என்பது புரிகிறது. சமூகத்திற்கும் எங்களுக்கும் இடையில் உள்ள இடைவெளி இதுதான். மத்ரஸாக்களின் பரீட்சை வினாத்தாள்களைப் பார்க்கும் போது அவை வெறுமனே புத்தகத்தை மையமாகக் கொண்டவையாகக் காணப்படுகின்றன. நடைமுறை வாழ்வுடனோ சமூகப் பிரச்சினைகளுடனோ ஆய்வுகளுடனோ அவை சம்பந்தப்படுவதில்லை.எமது பாடங்கள் சமகால உலகுடன் சம்பந்தப்படுத்தி கற்பிக்கப்படுவதில்லை.

இம்முறை இஸ்லாம் பாட வினாத்தாளில் நபிமார்களின் தொழிலைப் பற்றி, வியாபாரம் செய்வது பற்றி, வாழ்வில் நடுநிலை பேணுவது பற்றியெல்லாம் கேட்கப்பட்டிருப்பதை அவதானிக்க முடிகிறது. ஆனால் எல்லா மத்ரஸாக்களிலும் பரீட்சைகளில் நடைமுறை உலகுடன் சம்பந்தப்படுத்தி கேள்விகள் கேட்கப்படுவிதில்லை என்ற கசப்பான உண்மையை நாம் ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும்.

அவை விளக்கம் சொல்வது, அடையாளம் இடுவது, மொழிபெயர்ப்பது போன்ற விடயங்களுடனே அமையப் பெறுகின்றன.மாணவர்கள் சிந்திப்பதற்கு அங்கே இடம் இல்லை.

இந்தக் கலாசாரம் மாற வேண்டும். மத்ரசாக்களின் பரீட்சை முறை குறித்து உஸ்தாத்மார்கள் நிச்சயம் சிந்திக்க வேண்டும். 

பாடசாலைகளில் பாடத்திட்டம் இருக்கிறது.கற்பிப்பதற்கான முறை இருக்கிறது. ஆனால் அங்கு ஆள் வளப்பற்றாக்குறை இருக்கிறது. மத்ரஸாக்களில் ஆள்வளம் இருக்கிறது. ஆனால் கற்பிப்பதற்கான முறைமையில் போதாமை இருக்கிறது. 

எனவே மத்ரஸா ஆசிரியர்கள் பயிற்றுவிக்கப்பட வேண்டும். கல்விக் கோட்பாடுகள், மாணவர் உளவியல், கற்பித்தல் முறைமை என பல விடயங்களில் எமது உஸ்தாத்மார்கள் பயிற்றுவிக்கப்பட வேண்டும். 

இது குறித்து நாம் பேச வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம். பேசாததன் விளைவாக ஒவ்வொருவரும் தங்களிடம் இருப்பதை வைத்து சந்தோசப்படுகிறோம். இதனால் சமூகத்திற்கு எந்தப் பயனும் கிடைக்கவில்லை.

எனவே தயவு செய்து இந்தக் கருத்துக்களை எதிர்மறையாகப் பார்க்காமல் ஒரு நேர்மறையான உபதேசமாகப் பாருங்கள். ஆரோக்கியமான மாற்றங்களளை நோக்கி நகராமல் எதனையும் சாதிக்க முடியாது. 

எமது மாற்றம் வருங்காலத் தலைமுறையின் தலையெழுத்தையே மாற்றக் கூடியது. எனவே ஆரோக்கியமான மாற்றங்களை நோக்கி நகர்வோம். எமது முயற்சிகளில் பரஸ்பரம் உதவிக் கொள்வோம். எமது நல்ல முயற்சிகளை இறைவன் ஏற்றுக் கொள்வானாக!

6 comments:

  1. அருமையானதும் காலத்திற்கும்,குறிப்பாக இந்த நாட்டின் இன்றைய நிலைக்குமான தீர்வாக ஹஸறத் அவர்களின் இந்த ஆலோசனை முன்னெடுக்கப்படல் அவசியமாகிறது.

    ReplyDelete
  2. மதிக்கப்படும் உலமா ஒருவரால் இச்செய்தி சொல்லப்படுவது மிகவும் சநதோஷத்தைக் கொடுக்கிறது. முஸ்லீங்கள் மிக விரைவில் ஆரோக்கியமான மாற்றங்களை வரவேற்பதற்கான ஒளிக்கீற்றாகவே இச்செய்தியைப் பார்க்க முடிகிறது. ஜசாக்கல்லாஹ்.

    ReplyDelete
  3. பல தசாப்தங்களுக்கு முன்னரே கவனத்தில் எடுத்திருக்க வேண்டிய முக்கியமான விடயம்!
    நடைமுறை வாழ்வியலுடன் எமது உலமாக்களின் கல்வி திட்டம் வடிவமைக்கப்பட்டிருக்கவேண்டியது அவசிமாயதொன்றாகும்.

    ReplyDelete
  4. Hard to disagree. The Madrasa system needs a complete overhaul. The subject/syllabus structure needs to be expanded to include community needs and the role those who pass out should play in spreading
    Islamic Values in the Muslim Society so that the Muslims become Islamic instead of being mere name-sake Muslims.

    ReplyDelete
  5. நிச்சயமாக மத்ரஸாவில் கற்றுக் கொடுக்கும் ஆசிரியர் B.edu முடித்தால் இன்னும் நல்ல நிலையில் ஆசிரியர்கள் உஸ்தாத் மார்களை தெரிந்து கொள்ள முடியும் இல்லை எனில் அதிகமான நேரம் வீண் விரயமாகுமே தவிர வேறு எதுவும் இல்லை தற்போது உள்ள ஹஸரத்மார் அல்லாஹ்ட காவல் கற்றுக் கொடுக்கும் திறமை இல்லாமல் இருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது

    ReplyDelete
  6. உண்மையில் மிகவும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய கருத்து.... காலம் தாழ்த்தி சிந்தித்தாலும் பொருத்தமான நேரம் தான்

    ReplyDelete

Powered by Blogger.