Header Ads



சவூதியின் நீதித்துறை அமைச்சருக்கு விஜயதாச கடிதம் - ஒரு டொலரேனும் கிடைக்கவில்லை என்கிறார்


-TW -

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு 5 மில்லியன் அமெரிக்க டொலர்களை சவூதி அரசாங்கம் வழங்குவதாக அறிவிக்கப்பட்ட போதும், எவ்வித கொடுப்பனவுகளும் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படவில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் விஜேய தாச ராஜபக்ஷ சவூதியின் நீதித்துறை அமைச்சர் ஷேக் முகமதுபின் அப்துல் கரீம் அல்-இசாவுக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.

2021 ஜனவரி 12 திகதியிடப்பட்ட ஒரு கடிதத்தின் மூலம் முன்னாள் ஜனாதிபதி மற்றும் தற்போதைய ஜனாதிபதி மற்றும் ஜனாதிபதி செயலாளரிடமிருந்து இது தொடர்பில் விசாரணை செய்ததாக தெரிவித்துள்ள விஜயதாச ராஜபக்ச, சவுதி அரேபியா ஒரு டொலரைக் கூட வழங்கவில்லை என்பதை அவர்கள் உறுதிப்படுத்தியதாக குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவியில் இருந்தபோது நெலும் பொகுன மண்டபத்தில் வைத்து முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா மற்றும் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரின் முன்னிலையில் சவூதி அரேபியாவின் நன்கொடை அறிவிப்பு வெளியிடப்பட்டது.

எனினும் அந்த நிதித்தொகையில் ஒரு டொலரேனும் உயிர்த்த ஞாயிறுத்தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு கிடைக்கவில்லை என்றும் விஜயதாச சுட்டிக்காட்டியுள்ளார்.

7 comments:

  1. why do want give compensation affected bomb blast people by saudi
    no necessary
    rajpaksa thugs should give compensation affected people ,

    this country was deteriorated by shinkala people

    in future shinkala people not qualified for ruling this country thugs gang

    ReplyDelete
  2. நானும் இருக்கிறேன் என்று காட்டிக்கொள்ள நாளைக்கு என்ன சொல்லலாம் என்று இரவெல்லாம் யோசிக்கும் போல இந்தப் பேய்க்குஞ்சு.

    ReplyDelete
  3. You guys promised so many things. Have ever deliverd??? They (Saudi) build 500 housed in Nuraicholi for Sunami victims. You bloody racist buggers did not allow our guys to live in.

    ReplyDelete
  4. Why should they pay. Gotabaya did it so he has to pay

    ReplyDelete
  5. What about the Saudi funded 500 houses built at a cost of SR 42 million (more than 11 million dollars) in the Ampara District for Tsunami victims, the keys for which were handed over to the then President, Mahinda Rajapakse, in June 2011? Was any of the houses allotted to any Tsunami victim? No. Not even a single house was allotted. Ten years after completion, the houses are in dilapidated condition while the Tsunami victims have been left to their own devices to find a roof over their heads.

    The Reason? The houses were built for Muslim Tsunami victims and the Sinhala Racists wanted Sinhalese from elsewhere also allotted some houses regardless of whether they were Tsunami victims or not.

    Seems, Saudi grants to the benefit of suffering Sri Lankan minorities have a way of not reaching the intended beneficiaries.



    ReplyDelete
  6. வெட்கம் கெட்ட கூட்டம்

    ReplyDelete
  7. All of you.....this bantered's mind is different, cz his mind all of thugs and racism

    ReplyDelete

Powered by Blogger.