யாழ்ப்பாணம் - சென்னை நேரடி விமான சேவை மீண்டும் மீள ஆரம்பம்
கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக இடைநிறுத்தப்பட்ட யாழ்ப்பாணம் மற்றம் சென்னைக்கு இடையிலான நேரடி விமான சேவைகள் விரைவில் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன.
சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இதனை கூறியுள்ளார்.
அத்துடன், இரத்மலானை - யாழ்ப்பாணம் - மட்டக்களப்பு இடையிலான உள்ளக விமான சேவையை விரைவில் ஆரம்பிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
Post a Comment