கொரோனாவால் கர்ப்பமடையும் பெண்களின் விகிதம் வீழ்ச்சி - பணக்கார நாட்டில் கவலை
உலக பணக்கார நாடுகளில் ஒன்றான, சிங்கப்பூரின் மொத்த மக்கள் தொகை வெறும் 57 லட்சம் மட்டுமே.
உலகைன் பல நாடுகள் போன்று, ஊரடங்கால் வேலை இழந்து பலர் வருமானம் இழந்துள்ளதால், 2019-ஐ காட்டிலும் கடந்த ஆண்டில் 10 சதவிகிதம் அளவிற்கு திருமணங்களின் எண்ணிகை சிங்கப்பூரில் குறைந்துள்ளது.
பலர் குழந்தை பெற்றுக் கொள்ளும் முடிவை தள்ளி வைத்ததாகவும் கூறப்படுகிறது. குழந்தை வளர்ப்பில் உள்ள சிக்கல் காரணமாக இரண்டாவது குழந்தையை பெற்றுக்கொள்ள பலர் விரும்பவில்லை என்றும் தெரிகிறது.
இதனால், சிங்கப்பூரில் பெண்கள் கருவுறுதல் விகிதம் 1.1 ஆக சரிந்துள்ளது. மேலும், கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடந்த ஆண்டில், 38,705 குழந்தைகள் மட்டுமே பிறந்துள்ளன.
இதன் காரணமாகவே, பெருந்தொற்று சமயத்தில் குழந்தையை பெற்றெடுப்பவர்களுக்கு, அரசு தரப்பில் 5,31,000 ரூபாய் ஊக்கத்தொகையாக அறிவிக்கப்பட்டது.
மேலும், கருவுறுதலின் விகிதம் குறைவது, சிங்கப்பூரின் ஒட்டுமொத்த பொருளாதாரத்தையே காலி செய்துவிடும் ஆபத்தாக உருவாகி உள்ளதாக பொருளாதார நிபுணர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
பிறப்பு விகிதம் குறைந்தால் எதிர்காலத்தில் வேலைக்கு செல்பவர்களின் எண்ணிக்கை, வெகுவாக குறையும் என அவர்கள் எச்சரித்துள்ளனர்.
இதனால் அரசுக்கான வரி வருவாய் குறைந்து, சுகாதாரம் உள்ளிட்ட முக்கிய துறைகளின் செலவுகள் பாதிக்கப்படுவதொடு,
குடியேற்றக் கொள்கையில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அறிவுறுத்துகின்றனர்.
Post a Comment