படையினரின் வீரச்தீரச் செயல்
கொக்கிளாயிலிருந்து முல்லைத்தீவு பயணித்த மஹீந்திரா ஜீப் ரக வாகனம் ஒன்று நாயாறு களப்புக்குள் குடைச்சாய்தமையால் தண்ணீருக்குள் மூழ்கவிருந்த மூவருடைய உயிர்கள் படையினரால் காப்பாற்றப்பட்டன.
இவ்விபத்து இடம்பெற்ற பகுதிக்கு அருகில் சேவையாற்றிக் கொண்டிருந்த படையினர் ஆற்றில் குதித்து நீரில் மூழ்கவிருந்த மூவரையும் காப்பாற்றியதுடன், அவர்களுடைய வாகனத்தையும் மீட்டெடுத்தனர்.
அதனையடுத்து இவ்வாறு விபத்தில் சிக்கியவர்கள் இராணுவ வாகனமொன்றில் சிகிச்சைக்காக மாஞ்சோலை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
படையினர் மற்றும் பொதுமக்கள் இணைந்து களப்பிற்குள் இருந்து வாகனத்தை கரைச்சேர்த்தனர்.
மீட்கப்பட்ட சிவிலியன்கள் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்ட பின்பு அவர்களுடைய வாகனம் படையினரால் மீட்கப்பட்டது.
படையினரின் மனிதாபிமானச் செயலை மனதாரப் பாராட்டுகின்றோம். அவர்களின் இந்த உதவிக்கரம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என மனதார நம்புகின்றோம்.
ReplyDelete