Header Ads



நாடு முழுவதும் புற்றுநோயை உண்டாக்கும், மனித பாவனைக்கு உதவாத தேங்காய் எண்ணெய்


பண்டிகை காலத்திற்கு முன்னர் சந்தையில் மற்றும் சுங்கத்திடம் உள்ள இறக்குமதி செய்யப்பட்ட சுத்திகரிக்காத தேங்காய் எண்ணெய் மற்றும் பாம் எண்ணெய் மனித பாவனைக்கு உகந்ததா? இல்லையா? என்பது தொடர்பில் ஆய்வு செய்யுமாறு அரசாங்கத்திடம் கோரப்பட்டுள்ளது.

நாட்டில் பாரம்பரியமாக தேங்காய் எண்ணெயை உற்பத்தி செய்யும் உற்பத்தியாளர்கள் சங்கம் இந்த கோரிக்கையை விடுத்துள்ளது.

சுங்கத்தில் இருந்த 13 கொள்கலன்களிலுள்ள தேங்காய் எண்ணெயில் புற்றுநோய் ஏற்படக் கூடிய அப்லடொக்சின்ஸ்  என்ற இரசாயனங்கள் அடங்கியிருந்ததாக அந்த சங்கத்தின் பிரதான இணைப்பாளர் புத்திக டி சில்வா தெரிவித்துள்ளார்.

எனினும், இதே தொகுதியை கொண்ட எண்ணெய்கள் சந்தைக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதா இல்லையா என்பது எவருக்கும் தெரியாது.

எனவே அது தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என நாட்டில் பாரம்பரியமாக தேங்காய் எண்ணெயை உற்பத்தி செய்யும் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் பிரதான இணைப்பாளர் புத்திக டி சில்வா கோரியுள்ளார்.

2

நாடளாவிய ரீதியாக வர்த்தக நிலையங்களில் உள்ள தேங்காய் எண்ணெயை பரிசோதிக்கும் செயற்பாடு இன்று முதல் -24- ஆரம்பமாவதாக நுகர்வோர் நடவடிக்கைகள் தொடர்பான அதிகார சபை தெரிவித்துள்ளது.


அந்த அதிகார சபையின் தவிசாளர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரால் சாந்த திசாநாயக்க இதனை தெரிவித்துள்ளார்.

இறக்குமதி செய்யப்பட்ட மனித பாவனைக்கு உதவாத  தேங்காய் எண்ணெய் மற்றும் பாம் எண்ணெய் சந்தைக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தநிலையில் இது தொடர்பிலான பரிசோதனை செய்யும் நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பமாவதாக நுகர்வோர் நடவடிக்கைகள் தொடர்பான அதிகார சபையின் தவிசாளர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இறக்குமதி செய்யப்பட்ட மனித பாவனைக்கு உதவாத  தேங்காய் எண்ணெய் மற்றும் பாம் எண்ணெய்களை மீள் ஏற்றுமதி செய்யுமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் உணவு பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

அதன் உயர் அதிகாரி ஒருவர் எமது செய்திச் சேவைக்கு இதனை தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.