Header Ads



கதிரையில் அமர்ந்தவாறு உயிரிழந்த இளைஞன்: பொலிஸார் வழங்கியுள்ள விளக்கம்


மஹர மல்வத்த வீதியில் அமைந்துள்ள வீட்டின் முன் கதிரையில்அமர்ந்தவாறு நபரொருவர் உயிரிழந்த புகைப்படம் தற்போது சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.

கடவத்தப் பொலிஸார் இதுகுறித்து தெரிவிக்கையில்,

வீதியில் நடந்துசென்றுகொண்டிருந்த குறித்த இளைஞன் நெஞ்சுப் பகுதியை கையால் பிடித்தவாறு மிகவும் சிரமத்துடன் நடந்து சென்றதை அப்பகுதி மக்கள் அவதானித்துள்ளனர்.

குறித்த இளைஞன் அங்கிருந்த வீட்டின் முன் வைக்கப்பட்டிருந்த நாற்காலியில் அமர்ந்தவேளை இறந்துவிட்டதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

34 வயதான குறித்த இளைஞன் கடவத்த கோபியாவத்த பகுதியில் தற்காலிகமாக வசித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த இளைஞரின் பிரேத பரிசோதனை முடிவுகள் நாளை வெளியிடப்படும் என்றும் கடவத்த பொலிஸார் தெரிவித்தனர்.

No comments

Powered by Blogger.