குடும்பத்தினரிடம் தலையில்லா பெண்ணின் சடலம் ஒப்படைப்பு - இன்று இறுதி அஞ்சலி
-TW-
கொழும்பு டாம் வீதியில் பயண பைக்குள் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட தலை துண்டிக்கப்பட்ட இளம் பெண்ணின் சடலம் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
நேற்று இரவு குறித்த பெண்ணின் சடலம் அவரது சொந்த ஊரான குருவிட்ட தெப்பனாவ பிரதேசத்தில் உள்ள வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இன்றைய தினம் சடலத்திற்கு இறுதி அஞ்சலி செலுத்தப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்த பெண்ணின் தலையை தேடி கிடைக்காத நிலையில் சடலத்தை குடும்பத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
9 நாட்களின் பின்னர் தலையில்லாத பெண்ணின் சடலம் வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
Post a Comment