Header Ads



ஐ.நா தீர்மானம் குறித்து விவாதம் நடத்த எதிர்கட்சி கோரிக்கை, உடனடியாக முடியாது என சபாநாயகர் மறுப்பு


 -TW -

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையினால் அண்மையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பில் இன்று விவாதம் நடாத்த முடியாது என சபாநயாகர் மஹிந்த யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரைவயின் தீர்மானம் சட்டவிரோதமானது என வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன இன்று -25- அவையில் அறிவித்தார்.

இதன்போது எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளர் லக்ஸ்மன் கிரியெல்ல எழுந்து தனது கருத்துக்களை வெளியிட்டதுடன், இந்த தீர்மானம் தொடர்பில் விவாதம் நடாத்தப்பட வேண்டுமென கோரியிருந்தார்.

எனினும், இந்த கோரிக்கைக்கு சபாநாயகர் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டிருந்தார்.

இன்றைய தினம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைப் தீர்மானம் தொடர்பில் விவாதம் நடாத்தப்பட முடியாது எனவும் வேறும் ஓர் நாளை ஒதுக்கி விவாதம் நடாத்தப்பட முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் எதிர்க்கட்சியினர் விவாதம் நடத்தப்பட வேண்டுமென தொடர்ச்சியாக வலியுறுத்தியதனால் ஆளும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு இடையில் கடுமையான வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றன.

எவ்வாறெனினும், இன்றைய தினம் விவாதம் நடாத்தப்பட முடியாது என சபாநயாகர் திட்டவட்டமாக அறிவித்தார்.

1 comment:

  1. Yellow சால்வை கேட்க வேண்டும்

    ReplyDelete

Powered by Blogger.