Header Ads



புர்கா தடை பத்திரம், ஓரிரு வாரங்களில் அமைச்சரவைக்குக்கு நிச்சயம் வரும் - சரத் வீரசேகர


மாகாண சபை முறைமை ஒழிக்கப்பட வேண்டும் என்ற எனது நிலைப்பாடு ஒருபோதும் மாறாது.அதற்காகத் தொடர்ந்தும் குரல் கொடுப்பேன். அமைச்சரவையிலும் கருத்துகளை முன்வைப்பேன் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

மாகாண சபை முறைமைக்கு அமைச்சர் சரத் வீரசேகர கடும் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றார். ஆனாலும், மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.அவர் மேலும் தெரிவித்ததாவது,

மாகாண சபை முறைமையை ஒழிப்பேன் என நான் கூறவில்லை. அம்முறைமைக்கு எதிரானவன் நான். எனவே, குறித்த முறைமையை ஒழிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமானால் அதற்கு முழு ஒத்துழைப்பையும் வழங்குவேன்.

மாகாண சபை முறைமை தொடர்பில் நாடாளுமன்றம் தான் முடிவெடுக்க வேண்டும். இந்த விவகாரம் தொடர்பில் அமைச்சரவையில் கலந்துரையாடும் போது எனது கருத்துக்களை முன்வைப்பேன். மாகாண சபை முறைமை தொடர்பான எனது எதிர்ப்பு ஒருபோதும் மாறாது என்றும் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, புர்கா தடை தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அவர்,

அதற்கான அமைச்சரவைப்பத்திரத்தில் கையொப்பமிட்டுள்ளேன். முன்கூட்டியே ஒதுக்கப்பட்ட நிகழ்ச்சி நிரல்களின் அடிப்படையிலேயே அமைச்சரவைக்குப் பத்திரம் வரும்.

அந்த வகையில் தான் தாமதம் ஏற்பட்டுள்ளது. எனினும், ஓரிரு வாரங்களில் அமைச்சரவைக்குக் குறித்த பத்திரம் நிச்சயம் வரும் என்றும் தெரிவித்துள்ளார்.

5 comments:

  1. before that don't hang on the tree, world preparing big punishment for you, believe me, you are one of the culprit, need to go to jail first.

    ReplyDelete
  2. உலகில் பெரும்பாலான நாடுகள் இலங்கையை மிதித்து காலால் அமர்த்திக் கொண்டிருக்கும் போது புர்கா தடை அடுத்தமாதம் பாராளுமன்றத்துக்கு வருமாம்.இது போன்ற அமைச்சர்கள் இந்த நாட்டின் முன்னேற்றத்துக்கு என்ன செய்யப்போகின்றார்கள் என பொதுமக்கள் அங்கலாய்த்துக் கொண்டிருக்கின்றார்கள்.

    ReplyDelete
  3. என்னடா இது இவன் லூசா அல்லது லூசுப்பயப்புள மாதிரி

    ReplyDelete
  4. Thanks for Pakistan and Bangladesh

    ReplyDelete
  5. எப்போது அடங்குவே?

    ReplyDelete

Powered by Blogger.