யுத்தக் குற்றங்களை ஆவணப்படுத்தும் ஆணை, மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்திற்கு - ரொய்ட்டர்
இலங்கையின் யுத்த குற்றங்களை ஆவணப்படுத்துவதற்கான ஆணை ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரின் அலுவலகத்திற்கு கிடைத்துள்ளது.
2009 இல் முடிவடைந்த இலங்கையின் நீண்ட கால உள்நாட்டு யுத்தத்தின்போது இழைக்கப்பட்ட யுத்த குற்றங்களிற்கான ஆதாரங்கள் தகவல்களை சேகரித்து பாதுகாப்பதற்கான ஆணை ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளருக்கு வழங்கப்பட்டுள்ளது.
முகன்மை குழுக்களின் சார்பில் பிரிட்டன் கொண்டுவந்த தீர்மானத்தை ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை ஏற்றுக்கொண்டுள்ளது.
இதன் மூலம் எதிர்கால விசாரணைகளிற்காக விசாரணைகளை மேற்கொள்வதற்கான மனித உரிமை ஆணையாளரின் அலுவலகத்தின் திறனை வலுப்படுத்தியுள்ளது.
22 நாடுகள் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளன, 11 நாடுகள் எதிராக வாக்களித்துள்ளன, இந்தியா உட்பட 14 நாடுகள் வாக்களிப்பை தவிர்த்துள்ளன.
(தினக்குரல்)
Post a Comment