Header Ads



"இலங்கையை ஓரளவுக்காவது பாதுகாத்ததில், முஸ்லிம் நாடுகளின் பங்கு அளப்பரியது"


- SHM  Firthows -

கடந்த யுத்த  காலங்களின் பின்னர்  எல்லாம் இலங்கை அரசாங்கங்களுக்கு சர்வதேச ரீதியாக ஏற்பட்ட சிக்கல் நிலைகளின் போதெல்லாம் அதற்கு ஆதரவாக சென்று நட்பு நாடுகளின் ஆதரவுகளை பெற்றுக் கொடுக்கும் விடயத்தில் முன்னின்றவர்கள் என்றால் அது இலங்கை அரசாங்கத்தில் அன்று அங்கம் வகித்த முஸ்லிம் மற்றும் சிறுபான்மை சமூகத்தவர்களும் அவர்களின் பிரதிநிதிகளுமேயாகும் ,அந்த வகையில் அந்த ஆட்சிகளின் பங்குதாரர்களாக இருந்த முஸ்லிம் கட்சிகளின்  அமைச்சர்களின் பங்கு அறபு நாடுகளின் ஆதரவை பெறுவதில் அளப்பறிய பங்கை வகித்தது என்பது மட்டுமல்லாமல் அந்த வேளைகளில் எல்லாம் இலங்கை முஸ்லிம் மக்களின் அதிகம் படியான ஆதரவை பெற்ற முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் Rauff Hakeem ,மற்றும் ரிசாட் ,முன்னாள் அமைச்சர் பௌசி மற்றும் ஏனைய முஸ்லிம் அமைச்சர்கள் போன்று  இலங்கை முஸ்லிம் மக்களின் சன்மார்க்க அமைப்பான அ இ ஜ உலமாவின் பங்கும் அதில் முக்கிய பங்கை வகித்திருந்தது ,

இது உள் நாட்டில் ஏனைய சிறுபான்மை சமூகத்தினர் விடயத்தில் பல்வேறான விமர்சனங்களை ஏற்படுத்தி இருந்த போதும் முஸ்லிம்களின் அரசியல் தலைமைகளின் இவ்வாறான ஆதரவு காரணமாக அவ்வப் போது ஏற்பட்ட சர்வதேச நெருக்குவாரங்களில் இருந்து இலங்கை அரசாங்கம் ஓரளவு நிம்மதிப் பெருமூச்சை விட்டதை நாட்டு மக்கள் யாவரும் அறிவர் ,

அதே போன்று முஸ்லிம் அமைச்சர்களின் இந்த ஆதரவு திரட்டும் பணிக்கு அரபுலகமும் முஸ்லிம் நாடுகளும் தங்கள் ஆதரவையும் வழங்கி இருந்ததோடு இலங்கை அரசாங்கத்துக்கு அதன் அபிவிருத்தியின் பேரால் பெரும் நிதி உதவிகளையும் வழங்கி இருந்ததை முழு நாடும் அறியும் ,

எனினும் கடந்த வருடம் பதவிக்கு வந்து பெரும்பான்மை மக்களின் ஆதரவை பெற்ற அரசாங்கம் என்று கூறி சிறுபான்மை இனங்களை அடக்கி ஒடுக்குவதன் மூலம் தங்கள் இருப்பை உள்நாட்டில் பாதுகாத்துக் கொள்ளலாம் என்ற பேரின சிந்தனையில் மூழ்கிப் போன அரசின் செயற்பாடுகள் இவ்வாறு ஆதரவு தேடியவர்களையும் ஆதரவு வழங்கிய நாடுகளையும் அவர்களின் கோரிக்கைகளையும் புறம் தள்ளியதன் வெளிப்பாடு இப்போது நாட்டுக்கு பெரும் பின்ணடைவை சர்வதேசதில்  ஏற்படுத்தி உள்ளதை யாவரும் அறிவர் ,

இது விடயத்தில் முழுப் பொறுப்பும் இலங்கை அரசாங்கத்தை வழிநடாத்துவதாக கூறும் முஸ்லிம் மற்றும் சிறுபான்மை விரோத செயற்பாட்டை வெளிப்படையாக நடைமுறைப்படுத்தும் ஆட்சியாளர்களையே சாரும் ,

என்ன நடைபெறப் போகின்றது என்று விடயம் புரிந்த ஐ நா இலங்கை பிரதிநிதி பல்வேறான விடயங்களை இத்தகைய பேரின சிந்தனை கொண்ட அமைச்சர்களுக்கு மிக தெளிவாக கூறிய போதிலும் அவர்கள் உள்நாட்டு அரசியல் போக்கை மாத்திரமே பார்த்தனரே தவிர சர்வதேசத்தினை வெற்றி கொள்ள வேண்டும் என்ற விடயத்தை அவர்களின் இனவாத சிந்தனை மறைத்து விட்டது ,

இன்றைய நிலையில் இலங்கை எதிர்  கொண்ட எதிர் காலத்தில் கொள்ளப் போகும் அத்தனை விடயங்களுக்குமான பொறுப்பை இந்த இனவாத அமைச்சர்கள் அன்றி முழு நாடுமே எதிர் கொள்ள வேண்டிய துர்ப்பாக்கியம் நாட்டு மக்களுக்கு ஏற்பட்டுள்ளது வேதனைக்குரியதாகும் .

மொத்தத்தில் நேற்றைய வாக்கெடுப்பில் இலங்கையை ஓரளவுக்காவது பாதுகாத்ததில் அன்பு முஸ்லிம் நாடுகளின் பங்கு அளப்பரியது மாத்திரமன்றி இன்னும் இலங்கை அரசாங்கம் அறபுலகின் ஆதரவை கடந்த அரசாங்க காலங்கள் போன்று பெற்றிருந்தால் இம்முறையும் பாதுகாக்கப் பட்டிருக்கும் என்பதை விடயம் அறிந்தோர் உணர்ந்து கொள்வர் ,

இந்த நாட்டின் எந்த ஒரு குடிமகனும் அதிலும் இலங்கையில் பிறந்த முஸ்லிமானவன் தனது நாடு சர்வதேசத்தில் தலை குனிந்து நிற்பதை விரும்பவே மாட்டான் .

4 comments:

  1. இலங்கை அப்பாவி தமிழ் மக்களுக்கு அநீதி இலைக்கப்பட்டிருந்தால் அநீதி இழைத்த இந்த அரசாங்கமும் ரானுவமும் தன்டிக்கப்படவே வேண்டும் . இதுதான் அல்லாஹ்வின் சட்டம் . அல்லாஹ்வுக்கு பயப்படாமல் இந்த இனவாத அரசாங்கத்துக்கு பயந்து, இந்த அரசாங்கத்துக்கு விசுவாசமாக முஸ்லிம்கள் உள்ளார்கள் என்று காண்பிப்பதற்காக சுய நலத்துடன் முஸ்லிம் சமுகம் நடந்த அநீதியை மறைக்க செயற்படுமானால் அல்லாஹ்வின் பெரிய ஒரு தண்டனையை முஸ்லிம் சமுகம் எதிர்கொள்ளவேண்டிவரும். சூரா நிசா வசனம் 135 இன் படி நாம் சாட்சி கூறினால், அதனால் ஏற்படும் தீர்ப்பு தனக்கே பாதகமாக அமைந்தாலும் உண்மையையே கூற வேண்டும்.
    முஸ்லிம் நாடுகள் செய்தது குர்ஆனின் படியா அல்லது அரசியல் லாபத்துக்கா என்பதை நாம் சிந்திக்க வேண்டும். அதனால் முஸ்லிம். நாடுகள் செய்ததை வைத்து ஆறுதல் அடைவதற்கு ஒன்றும் இல்லை, மாறாக அந்த நாடுகள் வெட்கித்தலை குனிய வேண்டும் .
    இந்த கட்டுரையை எழுதியவர் அல்லாஹ்வை பயந்தவராக இருந்தால் இவ்வாறு எழுதி இருக்க மாட்டார் . அநீதி செய்தவனும் அதற்கு துனை போகிறவனும் அல்லாஹ்வின் தண்டனையை அனுபவித்தே ஆக வேண்டும்.

    ReplyDelete
  2. Naruppu sutta than purely

    ReplyDelete
  3. வாக்களித்த 47 நாடுகளில் 33 நாடுகள் இலங்கையை ஆதரிக்கவில்லை.தமிழர்கள் 1. ரணிலை தோற்கடித்த சிங்கள மக்களுக்கும் 2.இந்தியாவுக்கு எதிரான அரசியலுடன் சீனாவுக்கு நாட்டை திறந்துவிட்ட இன்றைய அரசை தெரிவுசெய்த சிங்கள மக்களுக்கும்தான் நன்றி சொல்லவேண்டும்.அமரிக்கா உட்பட பல மேற்க்கு நாடுகளில் புலம்பெயர்ந்த ஈழத்தமிழரதும் இந்திய தமிழரதும் கை ஓங்கி வருவதும் புதிய சூழலை உருவாக்கிவருகிறது.

    ReplyDelete
  4. Well said . Extremely true. All kind of assistence like this and other financial support to Sri Lanka by the Arab world should reach to the bottom root of the majority people of this country.

    ReplyDelete

Powered by Blogger.