Header Ads



தேங்காய் எண்ணெய்க்கு மாற்றீடாக சோயாபீன்ஸ் எண்ணெய் - முஸம்மிலுடைய கேள்விக்கு பந்துல பதில்


விலையுயர்ந்த தேங்காய் எண்ணெய்க்கு மாற்றீடாக சோயாபீன்ஸ் எண்ணெயை அறிமுகப்படுத்தவும் எதிர்காலத்தில் லங்கா சதொச மற்றும் கூட்டுறவு வலையமைப்பு மூலம் விநியோகிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன இன்று -24-  பாராளுமன்றில் கூறினார்.

பாராளுமன்ற உறுப்பினர் மொஹமட் முஸம்மில், ஆரோக்கியமற்ற தேங்காய் எண்ணெயை இறக்குமதி செய்வது தொடர்பாக எழுப்பிய வாய்மூல கேள்விக்கு அமைச்சர் பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு கூறினார்.

தீங்கு விளைவிக்கும் தேங்காய் எண்ணெய் குறித்து இதுவரை எந்த வித முறைப்பாடும் வரவில்லை என அமைச்சர் கூறினார்.

எந்தவொரு முறைப்பாடும் வரவில்லை எனினும் மனித உடலுக்குக் கேடு விளைவிக்கும் இது போன்ற தேங்காய் எண்ணெய் குறித்து விசாரணை நடத்த நுகர்வோர் விவகார அதிகாரசபைத் தலைவருக்கு நான் அறிவுறுத்தியுள்ளேன் என அமைச்சர் மேலும் கூறினார்.

(சி.எல்.சிசில்)


No comments

Powered by Blogger.