கிளிநொச்சியில் சடலம் மீட்பு - கொலை செய்யப்பட்டுள்ளதாகவும், கர்ப்பம் தரித்துள்ளதாகவும் கண்டறிவு
(சி.எல்.சிசில்)
கிளிநொச்சி அம்பாள் குளத்தில் நேற்று முன்தினம் சடலமாக மீட்கப்பட்ட பெண் கொலை செய்யப்பட்டுள்ளார் என உடல்கூற்று பரிசோதனை முடிவுகள் தெரிவித்துள்ளன.
அம்பாள் குளத்திலிருந்து பெண்ணொருவரின் சடலம் நேற்று முன்தினம் மீட்கப்பட்டிருந்த நிலையில் அது உடற்கூற்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
அதன் முடிவின் அடிப்படையில் அவர் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும், பெண் கர்ப்பம் தரித்துள்ளதாகவும் மருத்துவ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Post a Comment