கொரோனா தடுப்பூசி ஒவ்வாமையால், பிக்கு உயிரிழப்பு - ரதன தேரர் தெரிவிப்பு
பிரபல தர்ம போதகரான பன்னல ஞானாலோக்க தேரர், கோவிட் தடுப்பூசி வழங்கப்பட்ட பின்னர் ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாகவே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதன தேரர் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்த பிக்குவின் இறுதி கிரியைகள் நடத்தப்படும் தினம் இன்னும் தீர்மானிக்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஞானாலேக்க தேரர் உயிரிழந்தமை தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், கோவிட் பரிசோதனைகளின் பின்னர் கிடைக்கும் அறிக்கையினை அடுத்து அது குறித்து தீர்மானிக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
Post a Comment