தொடர் தடையும், முடக்கமும் - டிரம்ப் என்ன செய்யப்போகிறார்..? சொந்தமாக சமூக வலைதளம்..??
பேஸ்புக், ட்விட்டர் போன்ற தளங்களில் இருந்து நீக்கப்பட்டதை தொடர்ந்து சொந்தமாக சமூக வலைதள சேவையை துவங்க டிரம்ப் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பேஸ்புக் மற்றும் ட்விட்டர் போன்ற தளங்களில் இருந்து நீக்கப்பட்டதை தொடர்ந்து முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சொந்தமாக சமூக வலைதள சேவையை துவங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. புதிய சமூக வலைதளம் பற்றிய தகவலை டிரம்ப் முன்னாள் ஆலோசகர் தெரிவித்தார்
டிரம்ப் மீண்டும் சமூக வலைதளங்களில் திரும்புகிறார், சுமார் இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்குள் இது நடைபெறலாம் என ஜேசன் மில்லர் தனியார் நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.
இது போட்டியை முற்றிலும் மாற்றி அமைக்க போகிறது. டிரம்ப் என்ன செய்யப்போகிறார் என அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ஆனால் இது அவரின் சொந்த தளமாக இருக்கும் என அவர் மேலும் தெரிவித்தார். ஜேசன் மில்லர் டிரம்ப் தேர்தல் பரப்புரை பணிகளில் மூத்த பதவிகளை வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய வலைத்தளத்திலும்
ReplyDeleteதனிக்காட்டு எருமையாக வலம்வர வாழ்த்துக்கள் ட்ரம்ப்.