இலங்கை தேசிய கொடியை அவமதிக்கும் Amazon - விசாரணை நடத்தப்படுமென அமைச்சர் தெரிவிப்பு
இலங்கை தேசியக் கொடியில் எந்தவித மாற்றத்தையும் மேற்கொள்ளாது அதனை உள்ளபடியே அச்சிட்டு தயாரிக்கப்பட்ட கம்பளம் ஒன்று 12 அமெரிக்க டொலர்களுக்கு (சுமார் 2,500 இலங்கை ரூபா) விற்பனைக்காக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், இலங்கையின் தேசியக் கொடி பொறிக்கப்பட்ட கம்பளங்கள், பாதணிகள், முகக்கவசங்கள் உள்ளிட்ட பொருட்களும் இவ்வாறு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், இவ்விடயம் தொடர்பில் தற்போது பலர் தமது விமர்சனங்களை முன்வைக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் கௌவரத்துக்குரிய தேசியக் கொடிக்கு இவ்வாறான அவமதிக்கும் வகையிலான செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள் தொடர்பில் கண்டறிந்து அவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் என பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
இதேவேளை, கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றின்போது, இது தொடர்பில் கூட்டுறவுச் சேவைகள் சந்தைப்படுத்தல் அபிவிருத்தி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்னவிடம் எமது செய்தியாளர் வினவியபோது, இது தொடர்பில் உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.
அத்துடன், இவ்வாறான அவமதிப்பினை மேற்கொண்டவர்களை இனங்காண்பதற்கு ,தூதரங்கள் ஊடாகவும் உதவிகளை பெறவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
Post a Comment