காலியில் கொரோனா ஜனாஸாக்களை அடக்க 4 இடங்கள் தயார் - பணிப்பாளரால் கடிதம்
கொரோனா வைரஸால் உயிரிழக்கும் காலி மாவட்ட முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கான நான்கு இடங்கள் பெயரிடப்பட்டுள்ளன.
இதுத் தொடர்பான கடிதம் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தால், காலி மாவட்ட செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
காலி - கடுகொட புஞ்சிவத்த, ஹாலிவல, நாவின்ன, ஒசனகொட ஆகிய பிரதேசங்களில் உள்ள பள்ளிவாசல்களுக்கு சொந்தமான இடங்களே இவ்வாறு ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்காக அடையாளங்காணப்பட்டுள்ளன.
மேற்குறித்த இடங்களில் நீராதாரங்கள் இல்லை என்பதால், பெயரிடப்பட்டுள்ள நான்கு இடங்களில் இரு இடங்களில் ஜனாஸாக்களை அடக்கம் செய்யப்படலாமெனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
Post a Comment