வபாத்தாகி 37 நாட்களின் பின் ஓட்டமாவடியில், நல்லடக்கம் செய்யப்பட்ட வைத்தியர்
யாருடைய மனதையும் நோவினை செய்யாத இந்த இளைஞர் மரணித்துவிட்டார்.....
இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
யாருடனும் இனிமையாகப் பழகும் இளகிய மனம்கொண்ட டில்சாத் (வயது 27) காலமாகிவிட்டார்.
திருகோணமலை வசிப்பிடமான M H M தில்சாத் இவரின் தந்தை M I M ஹக்கீம் காத்தான்குடியில் பிறந்து திருகோணமலையில் வசித்து வருபவர்.
நான் அறிந்த வகையில் தில்சாத் மிகவும் கண்ணியமாகவும் அன்பாகவும் பழகக் கூடியவர் பெரியோர்களிடத்தில் மரியாதை செலுத்தக்கூடியவர் அனைவருக்கும் உதவி செய்யக்கூடியவர்
காத்தான்குடி 04 காஸிம் ஹாஜியார் லேனைச்சேர்ந்த மர்ஹூம் MMM இப்றா லெவ்வை,, (ஓய்வு பெற்ற அதிபர்) அவர்களின் பேரனான இவர் ஒரு physiotherapy வைத்தியராவார்.
Jhone kothalavala University Hospital இல் நியமனம் கிடைத்து சேவைபுரிந்து வரும் நிலையிலேயே 31.01.2021 அன்று மரணித்துள்ளார்.
இவர் காத்தானகுடியைச் சேர்ந்த M I M ஹம்தூன்( Harbour Colombo) M I M தமீம் ஆகியோரின் சகோதரனின் மகனும் A L ஆதம் லெவ்வை S A மொஹிடீன்( Rtd. Teacher) M H M சுபைர் M C M சமீம் ஆகியோரின் மகனும் ஆவார்
யா அல்லாஹ் அன்னாரி்ன் பாவங்களை மன்னித்து, கப்ரை சுவர்க்க பூஞ்சோலையாக மாற்றுவயாக...
அவரின் பெற்றோருக்கும் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கும் தாங்கிக்கொள்வதற்கான சக்தியை கொடுப்பாயாக..
இவர் இன்று 09.03.2021 ஓட்டமாவடியில் நல்லடக்கம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது
எம். எச். எம். அன்வர்
(உறவினர்)
Post a Comment