Header Ads



30 நாட்களில் 9 முஸ்லிம் நாட்டு, தூதுவர்களை சந்தித்த இம்தியாஸ் எம்.பி.


ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரும், மூத்த முஸ்லிம் அரசியல்வாதியுமான இம்தியாஸ் பார்க்கீர் மரிக்கார்  கடந்த 30 நாட்களில் 9 முஸ்லிம் நாட்டுத் தூதுவர்களை சந்தித்துள்ளார்.

இஸ்லாமிய நாடுகளுடன் தமது கட்சியின் சார்பில் இணைப்பை பேணுகின்றவராகவும், முஸ்லிம் உலகுடன் தொடர்பை ஏற்படுத்தும் இணைப்பாளராகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர், சஜித் பிரேமதாஸாவினால் இம்தியாஸ் பார்க்கீர் மரிக்கார் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்தநிலையில் இம்தியாஸ் பார்க்கீர் மரிக்கார், கடந்த 30 நாட்களில் லிபியா, மாலைதீவு, பங்களாதேஸ், ஓமான், குவைத், பலஸ்த்தீன், ஈராக், எகிப்து, இந்தோனேசியா  உள்ளிட்ட 9 நாடுகளின் தூதுவர்களை சந்தித்துள்ளார். 

எதிர்வரும் வாரங்களிலும் சவூதி, கட்டார், ஐக்கிய அரபு ராட்சியம் உள்ளிட்ட இன்னும் சில தூதுவர்களையும் சந்திக்க உள்ளார்.

இச்சந்திபுகளின் போது இலங்கைக்கு அரபு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள், அரசியல், சமூகம், பொருளாதாரம் மற்றும் பூகோள் அரசியல் நிலவரங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளதுடன், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை கட்டி எழுப்புவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பார்க்கீர் மரிக்கார், ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு குறிப்பிட்டார்.

அதேவேளை இஸ்லாமிய நாட்டுத் தூதுவர்களுடனான இச்சந்திப்புகளின் போது, இம்தியாஸ் பார்க்கீர் மரிக்காரினால் இலங்கையின் முதலாவது பள்ளிவாசலாக கூறப்படுகின்ற, பேருவளை மஸ்ஜித்துல் அப்ரார் பள்ளிவாசலின் புகைப்படமொன்றையும் நினைவுச்சின்னமாக வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

3 comments:

  1. UNMAIYL ITHU ORU PERIA SHAATHANAI.
    SAJITHUM ORU MAATHATHIL 400 KOOTTANGALIL URAIYAARRINAAN.
    ANAAAAAL SHAATHITHATU ENNA????

    ReplyDelete
  2. AMAICHARAAKA IRUNDUKONDU PADAITHA SHAATHANAIKALAIVIDA PERIA SHAATHANAIYA
    ITHU!!!

    ReplyDelete
  3. The name is:

    Imthiyas Baakeer MARKAR and NOT Imthiyas Baakeer Marikkar

    ReplyDelete

Powered by Blogger.