இலங்கையின் வரலாற்றில் புதிய, சாதனையை நிலைநாட்டிய 2 சகோதரர்கள்
- ஏ.பி.எம்.அஸ்ஹர் -
இலங்கையின் பிரதேச செயலக வரலாற்றில் அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் புதிய வரலாறொன்று இன்று பதிவாகியுள்ளது.ஒரே குடும்பத்தைச்சேர்ந்த இரு சகோதரர்கள் பிரதேச செயலாளராகவும் உதவிப்பிரதேச செயலாளராகவும் ஒரே நேரத்தில் கடமையாற்றுவதன் மூலமே இவ்வரலாற்றுச்சரித்திரம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.இங்கு இதற்கு முன்னர் பிரதேச செயலாளராகக்கடமையாற்றிய ஜே.லியாகத் அலி அண்மையில் கல்முனைப்பிரதேச செயலகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டதையடுத்து தமண பிரதேச செயலகத்தில் உதவிப்பிரதேச செயலாளராகக்கடமையாற்றி வந்த அட்டாளைச்சேனையைச்சேர்ந்த எம்.ஏ.சி.அஹ்மட்.ஸாபிர் பிரதேச செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.இவர் இன்று புதன் கிழமை தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.
இதே வேளை இவரது.மூத்த சகோதரர் எம் ஏ.சி.அஹ்மட் நஸீல் ஏறகனவே இங்கு உதவிப்பிரதேச செயலாளராக்ககடமையாற்றி வருகின்றார்.இளைய சகோதரன் பிரதேச செயலாளராகவும் மூத்த சகோதரன் உதவிப்பிரதேச செயலாளராகவும் கடமையாற்றுவதும் மற்றுமோர் வரலாற்றுப்பதிவாகும்.நீண்ட.காலத்திற்குப்பிறகு அட்டாளைச்சேனையைப்பிறப்பிட்மாகக்கொண்ட ஒரு சிரேஷ்ட நிருவாகஅதிகாரியொருவர் பிரதேச செயலாளராக நியமிக்கப்கட்டுள்ளதை இப்பிரதேச சமூக சேவை நிறுவனங்களும் சமூக ஆர்வளர்களும் பெரிதும் வரவேற்றுள்ளனர்.இதே வேளை இன்றைய பதவியேற்பு நிகழ்வின் போதுஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பபாகரன் பிரதேச செயலாளரின் குடும்பஉறுப்பினர்கள் மற்றும் தமண் மற்றும் அட்டாாளைச்சேனை பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் உட்பட. பலரும் கலந்து கொண்டனர்
Congratulations
ReplyDeletecongratulations
ReplyDeleteCongratulations
ReplyDeleteCongratulations.
ReplyDeleteThough,
It is not more than the prime minister and the president from same family,that occurred many occasions in our land
மகிழ்ச்சி.
ReplyDelete