Header Ads



புற்றுநோய் தேங்காய் எண்ணெய் 2 பவுசர்களை சுங்கத்திற்கு அனுப்பியது ஏன்..? நீதிபதி கேள்வி


புற்றுநோயை ஏற்படுத்தும் பதார்த்தங்கள் அடங்கியுள்ளதாக சந்தேகத்தின் பேரில் தங்கொட்டுவை பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட தேங்காய் எண்ணெய் ஏற்றிய இரண்டு பவுசர்களும் நீதிமன்ற உத்தரவை மீறும் வகையில் சுங்கத்திற்கு ஒப்படைக்கப்பட்டமை இன்று தெரியவந்தது.

மாரவில நீதவான் நீதிமன்றத்தில் பொலிஸார் விடயங்களை முன்வைத்த போதே இந்த விடயம் உறுதியானது.

தங்கொட்டுவை பொலிஸாரின் பொறுப்பில் இருந்த இரண்டு தேங்காய் எண்ணெய் பவுசர்களும் இன்று காலை பொலிஸ் நிலையத்தில் இருந்து வௌியில் கொண்டுவரப்பட்டு, கொழும்பு துறைமுக சுங்கப் பிரிவிற்கு கொண்டு செல்லப்பட்டிருந்தன.

பவுசரில் காணப்பட்ட தேங்காய் எண்ணெயின் மாதிரி சுங்கப் பிரிவிற்கு உள்ளே இருந்தே பரிசோதனைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தின் பொறுப்பில் இதனை வைத்துக்கொண்டு மாதிரியை பரிசோதனைக்கு அனுப்புமாறு மாரவில நீதவான் ரக்கித்த அபேசிங்க உத்தரவிட்டிருந்த பின்புலத்திலேயே இந்த இரண்டு பவுசர்களும் சுங்கத்தின் பொறுப்பில் இருந்தன.

இரண்டு பவுசர்களும் எந்தப் பின்புலத்தில் சுங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டன என மாரவில நீதவான் ரக்கித்த அபேசிங்க இன்று பொலிஸாரிடம் வினவினார்.

பொலிஸ் சட்டப் பிரிவின் ஆலோசனைக்கு அமைய, தாம் இரண்டு பவுசர்களையும் சுங்கத்திடம் ஒப்படைத்ததாக தங்கொட்டுவை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

பொலிஸார் செயற்பட வேண்டியது பொலிஸ் சட்டப்பிரிவின் ஆலோசனைக்கு அமைவாகவா அல்லது நீதிமன்ற உத்தரவிற்கு அமைவாகவா என நீதவான் இன்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் வினவியுள்ளார்.

தங்கொட்டுவை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அதற்கு பதிலளிக்காத நிலையில், அது தொடர்பில் ஆராய்ந்து அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு மாரவில நீதவான் பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளார்.

குறித்த வழக்கு அடுத்த மாதம் 21 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

எனினும், சுங்கத்தின் பொறுப்பில் இருக்க வேண்டிய சர்ச்சைக்குரிய தேங்காய் எண்ணெய், அதனைக் கொண்டு வந்த நிறுவனங்களின் களஞ்சியசாலைக்கு அனுப்பப்பட்டமை தொடர்பில் தற்போது பிரச்சினை ஏற்பட்டுள்ளது. (News 1st)

1 comment:

  1. The infringement of the law had taken place with the connivance of government officials, especially the government customs officials which has enabled these types of unrefined coconut oil containing the carcinogen to enter the country. Trying to trace the consignments is like chasing behind "the shadow". Though 13 containers and a few more consignments of these life threatning food items have been found, it is reported that these imports have been going on for a long time, conveniently undetected with the connaivance of the Customs Officials and other goverment officials who are bribed in the millions by these importers. The bigest threat to the "PEOPLES" welbeing and "DEVELOPMENT" of our "MAATHRUBOOMIYA" is not terrorism or extremism as it seems. IT IS THE CORRUPT GOVERNMENT OFFICIALS AT ALL LEVELS OF PUBLIC SERVICES IN THE COUNTRY. The currup Police and Customs Officials who returned these 2 bowsers to the Customs against the court order has to be severely punished by both the courst and the police administration. It is very clear that there is a powerfull hand behind this to "COVER UP" this crime against our "MAATRUBOOMIYA". HE. Gotabaya Rajapaksa, do NOT fear the 1.3 million odd public/government servants because they may retaliate if you take action against them or strike and cripple the economy/country, but like how you erradicated the ruthless LTTE in 2009, wage war against these corrupt officials and rid the country of this menance once and for all. Those patriotic government officials/servants who love their "MAATHRUBOOMIYA" should/have come forward to help you do this.
    Noor Nizam - Peace and Political Activist, Political Communications Researcher, SLFP/SLPP Stalwart and Member "Viyathmaga".

    ReplyDelete

Powered by Blogger.